• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-15 18:06:44    
கிராமப்புறத்தில் மருத்துவ மற்றும் சுகரதார நிலைமை

cri


நேயர்களே. சீனாவில் விவசாயிகளின் மக்கள் தொகை 80 கோடியாகும். அவர்களின் சுகாதார பிரச்சினை மிக முக்கியமானது. ஆனால், சீனாவில் நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் சமநிலையற்ற பிரச்சினை நிலவுகின்றது. கிராமப்புறங்களில் குறிப்பாக மேற்கு பகுதியிலுள்ள கிராமப்புறங்களில் மருத்துவ மற்றும் சுகாதார நிலைமை தாழ்ந்த நிலையில் உள்ளது. வசதிகளும் திறமைசாலிகளும் குறைவு. வருமான பற்றாக்குறை என்ற காரணங்களால் சில வேளையில் விவசாயிகள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் கட்டணம் செலுத்த இயலாது. கடந்த சில ஆண்டுகளாக, கிராமப்புறங்களில் மருத்துவ மற்றும் சுகாதார துறையிலான முதலீட்டை சீன அரசு இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது. இன்று சுங்சின் நகரின் நிலைமை பற்றி கூறுவோம்.


Qian jiang என்னும் பிரதேசம், சுங்சின் நகரைச் சேர்ந்தது. இதன் மொத்த மக்கள் தொகை சுமார் 5 இலட்சமாகும். மக்கள் பெரும்பாலானோர் கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். இங்கே வாழும் குழந்தைகள் நோய் தடுப்பு ஊசி போடும் போது கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஏனென்றால், அரசு கட்டாய நோய் தடுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. Qian jiang பிரதேசத்தின் Shi hui பட்டிண சுகாதார நிலையத்தின் மருத்துவர் லீ ச்சே அம்மையார் கூறியதாவது,
முன்பு, குழந்தைகளுக்கு நோய் தடுப்பு ஊசி போட பல பெற்றோர்கள் விரும்பவில்லை. காரணம் கட்டணம் கொடுக்க வேண்டும். தற்போது, கட்டணம் நீக்கப்பட்டது. பல பெற்றோர்கள் முன்முயற்சியுடன் இங்கே வந்து இது பற்றி விசாரிக்கின்றனர். தற்போது, ஏறக்குறைய அனைத்து குழந்தைகளும் இலவச நோய் தடுப்பு ஊசி போடப்படுகின்றனர். அவர்களின் உடல் நலம் பாதுகாக்கப்படுகின்றது என்றார் அவர்.
குழந்தைகளின் நோய் தடுப்பு தவிர, கர்ப்பிணிகளும் இலவச மருத்துவ பரிசோதனையையும் கருத்தரிப்புக்குப் பிந்திய சேவையையும் பெறலாம். 2005ஆம் ஆண்டு முதல் Qian jiang பிரதேசத்தில் வாழும் விவசாயிகள் அரசிலிருந்து குழந்தைகளின் நோய் தடுப்பு ஊசி, கர்ப்பிணி உடல் நிலை பரிசோதனை முதலிய 4 சேவைகளுக்கான இலவசச் சீட்டுக்களை பெற முடிகின்றது. அவர்களின் மருத்துவச் சிகிச்சை சுமை பெரிதும் குறைக்கப்பட்டது.


பொதுச் சுகாதாரச் சேவை சீட்டுகளை வழங்குவது, கிராமப்புறத்தில் மருத்துவ மற்றும் சுகாதார முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகும். 2003ஆம் ஆண்டு முதல், Qian jiang பிரதேசம், சுங்சின் நகரத்தில் புதிய ரக கிராம ஒத்துழைப்பு மருத்துவ முறைமையின் முதலாவது தொகுதி ஆய்வு பிரதேசங்களில் சேர்க்கப்பட்டது. உள்ளூர் ஒரு விவசாயி ஆண்டுக்கு 10 யுவான் மட்டும் செலுத்தினால், நாடு மற்றும் உள்ளூர் நிதி வழங்கும் 50 யுவான் மதிப்புள்ள மருத்துவ உதவி தொகையை அனுபவிக்கலாம். விவசாயிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், 40 விழுக்காட்டு மருந்து கட்டணத்தையும் 65 விழுக்காட்டு மருத்துவமனை படுக்கை கட்டணத்தையும் அரசிலிருந்து திரும்ப பெறலாம். மருத்துவக் கட்டணம் பெரிதும் குறைக்கப்பட்டது. விவசாயிகள் உண்மை நலன் பெற்றுள்ளனர். ஒத்துழைப்பு மருத்துவ முறைமையில் சேரும் அவர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் திங்கள் வரை, Qian jiang பிரதேசத்தில் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட விவசாயிகள் இந்த அமைப்புமுறையில் சேர்ந்துள்ளனர்.