• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-16 11:00:45    
அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கு முயற்சி

cri

தரச்சான்றிதழ் பெற்ற ஆடைகள் மற்றும் அலங்காரப் பொட்களை விற்கும் கடைகளைத் தவிர, நகை கடைகளும், சீனாவின் பாரம்பரிய கைவினைப் பொட்கள் கடைகளும், சியூ சுய் வீதிச் சந்தையில் அதிகரித்துள்ளன. இந்தச் சந்தை புதிய பொலிவுடன் உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மேலும் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

கனடாவிலிருந்து வந்த Jim Michael பெய்ஜிங்கில் 20 நாட்கள் தங்கியுள்ளார். அவர் 2 முறை சியூ சுய் வீதிச் சந்தைக்கு வருகை தந்தார். எமது செய்தியாளரிடம் அவர் கூறியதாவது—

"இந்தச் சந்தையில் பொருட்களை வாங்குவது வேடிக்கையானது. விலை பற்றி பேரம் பேசுவதம் வேடிக்கையானது. இங்குள்ள வணிகர்களும் நட்பார்ந்தவர்கள். பொருட்களின் தரமும் நன்றாக உள்ளது. நானும் எனது மனைவியும் பல பொருட்களை வாங்கினோம்" என்றார் அவர்.

மேலும், இந்தச் சந்தையில் புதிதாக இடம்பெறும் சீனாவின் பாரம்பரிய பிரபல வணிகப் பொருட்கள், பல அந்நிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன. குறிப்பாக, இங்குள்ள Rui Fu Xiang என்ற கடையின் கிளை பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். நூறு ஆண்டுகால வரலாறு உடைய இந்தக் கடையில், பட்டுத்துணி, கம்பளித் துணி ஆகியவை முக்கியமாக விற்பனை செய்யப்படுகின்றன. இக்கடையின் பொது மேலாளர் சோ கோ பிங் கூறியதாவது— 

Rui Fu Xiang என்ற கடையின் கிளை

"எமது வணிகப் பொருட்கள் தலைமைக் கடையினால், சு சோ, ஹாங் சோ ஆகிய இடங்களிலிருந்து சிறப்பாக கொள் வனவு செய்யப்பட்டு, எங்களுக்கு வழங்கப்படுகின்றன. பொருட்களின் தரம் அதற்கான வரையறையை எட்ட வேண்டும். துணிகளின் நிறம் நீடித்து இருக்கும் தன்மை உள்ளிட்ட குறியளவுகள் பற்றிய தர நிர்ணய அறிக்கைகள் எமக்கு உண்டு. நுகர்வோருக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்" என்றார் அவர்.

இந்தக் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்ட சீனாவின் தாங் வம்சக்காலத்தின் பாரம்பரிய ஆடைகளை மாதிரியாகக் கொண்டு ஆடைகளைத் தயாரிக்குமாறு, அந்நிய நண்பர்கள் துணிகளை வாங்கிய பின் அடிக்கடி இக்கடைக்கு கோரிக்கை விடுக்கின்றனர். கீழை நாடுகளின் எழிலுடன் நேர்த்தியான வேலைப்பாடுடைய இந்தச் சீனப் பாணி ஆடைகளின் மாதிரிகள், அனைவரையும் கவர்கின்றன.

Rui Fu Xiang  பற்றிய விளம்பரம்

அந்நிய வாடிக்கையாளர்கள் பெய்ஜிங்கில் தங்கியிருக்கும் நேரம் குறைவு என்பதால், அவர்களின் தேவையை நிறைவு செய்ய, Rui Fu Xiang கடை, விரைவு ஆடைத் தயாரிப்பு என்ற அலுவலைத் துவக்கியுள்ளது.

தேசிய இன மற்றும் உரிமம் பெற்ற பொருட்களை விற்க வணிகர்களுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு, சியூ சுய் வீதிச் சந்தை 3 கோடி யுவான் முதலீடு செய்து, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கான சிறப்பு நிதியத்தை நிறுவியுள்ளது.

ஆழகான சியூ சுய் வீதி என்ற சந்தை

சிறிய சியூ சுய் வீதிச் சந்தையில் ஏற்பட்ட அலுவல் மாற்றம், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை சீனா பெரிதும் வலுப்படுத்துவதை அடையாளப்படும் ஒரு குட்டி உதாரணம் என்று கூறலாம். இந்த மாற்றம், ஐரோப்பிய ஒன்றிய வணிகச் சங்கத்தின் அறிவுசார் சொத்துரிமை கமிட்டித் தலைவர் Paul Ranjardஇன் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்மாற்றத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

"பிரச்சினைகளைத் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நேரில் கண்டு, மகிழ்ச்சி அடைகின்றோம். போலியான பொருட்களின் தயாரிப்பை ஒடுக்க பாடுபட்டு வரும் சீனாவிலான மிகச் சிறந்த முன்மாதிரியாக, சியூ சுய் வீதிச் சந்தை இறுதியில் மாற வேண்டும் எனவும், பெய்ஜிங்கிலுள்ள இதர போட்டியாளர்களிடையில் அது தொடர்ந்து மேம்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் எனவும் விரும்புகின்றோம்" என்றார் அவர்.