• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-16 11:13:43    
சோப்பு 3

cri

"இப்ப எல்லாம் இந்த மாணவர்கள் என்ன படிக்கிறாங்கன்னே புரியலே" கொஞ்ச நேரம் ஓய்ந்திருந்த ஸு மின் புலம்பத் தொடங்கினான்.

"முன்பு(குவாங் ஸு) காலத்தில் நிறைய பள்ளிக் கூடங்களை திறக்கிறது நான் ஆதரிச்சேன். இந்த மாதிரி பிசாசுகள்தான் வரும்னு அப்போது எனக்குத் தெரியாமல் போச்சு. நமக்கு என்ன சுதந்திரம் கிடைச்சிருக்கு? என்ன மறுமலர்ச்சி வந்திருக்கு? உண்ணையான கல்வின்னு எதுவுமே இல்லே. எல்லாமே அபத்தம். ஸுவே செங் படிக்க எவ்வளவு பணம் செலவழிச்சுட்டேன். எல்லாமே வீண். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பாதி ஆங்கில பாதி சீன பள்ளியில் சேர்த்தேன் அவனை. ஆங்கிலம் பேசவும், புரிஞ்சுக்கவும் கொல்லித்தரதா தம்பட்டம் அடிக்கிறாங்க. ப்பூ... ஒரு வருசம் கழிச்சும் இவனுக்கு ஒரு புன்னா என்னான்னு தெரியலே. இன்னும் பழைய பாழாப்பேன புத்தகங்களைத்தான் படிக்கிறான் போலிருக்கு. இந்தப் பள்ளியினால என்ன பிரயோஜனம் சொல்லு? நான் என்ன சொல்ல வர்றேன்னா... எல்லாத்தையும் இழுத்து மூடுங்களேன்."

"ஆமா... எல்லாத்தையும் இழுத்து மூடுறதுதான் நல்லது," காகிதப் பணத்தை ஒட்டியபடியே அவனுடைய மனைவி ஒத்தூதினாள்.

"ஸியுவும். அவளோட தங்கச்சியும் எந்த பள்ளிக் கூடத்துக்கும் போக வேண்டாம். பொம்பளைப் புள்ளகை படிச்சி என்ன பண்ணப் போகுதுன்னு ஒன்பதாவது தாத்தா சொல்வாரு. அவர் அப்படிச் சொன்னப்போ நான் கண்டிச்சேன். இப்பொ, பெரியவங்க சொல்றது சரிதான்னு படுது. தெருவுல பொட்டைக திரியுறதுப் பாரு. இப்ப முடியை குட்டையா வெட்டிக்கிறாங்க. குட்டை முடி பள்ளிப் பிள்ளைகளைப் போல அசிங்கம் வேறு எதுவுமே இல்லே. நான் என்ன சொல்ல வர்றேன்னா—ராணுவ வீரர்களையும், கொள்ளைக்காரங்களையும் மன்னிச்சுறலாம். இந்தப் பொண்ணுங்கள மட்டும் விட்டு வைக்கக் கூடாது. எல்லாத்தையும் தலை கீழா மாத்தறது இவங்கதான்..."

"ஸுவே செங்!"

அவன் வேகவேகமாக ஒரு சிறிய ஒடித்த கில்ட் விளிம்புகளுடன் கூடிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

ஒரு இடத்தைக் காட்டி, "இதாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்" என்றான்.

"இதோ."

ஸுமின் அதை வாங்கிப் பார்த்தான். அது ஒரு அகராதி என்பதை அவர் அறிவார். ஆனால் எழுத்துக்கள் மிகச்சிறியளவயாகவும் கிடக்கை வாக்கிலும் அச்சிடப்பட்டிருந்தன. கண்களை இடுக்கிக் கொண்டு ஜன்னல் அருகே சென்று ஸுவே செங் காட்டிய பகுதியை வாசிக்க முயன்றார்.

"பதினெட்டாம் நூற்றாண்டில் பரஸ்பர உதவிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சங்கம்..."

"இல்லை. இதுவாக இருக்க முடியாது. இதை எப்படி உச்சரிப்பே...?" முன்னால் இருந்த ஒரு பிசாசு வார்த்தையைச் சுட்டிக்காட்டினார்.

"ஓட் பெல்லோஸ்..."

"இல்லை. இல்லை. இல்லை" திரும்பறம் அவருக்கு கோபம் வெடித்தது.

"அது ஒரு திட்டு வார்த்தைன்னு நான் சொன்னேன். புரியலையா? போ, போய் பாரு."
ஸுவே செங் அவரையே உற்றுப் பார்த்தான். ஆனால் அசையவில்லை.