• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-17 19:31:05    
தேய் இனத்தின் புத்தாண்டு

cri

சீனாவின் 55 சிறுப்பான்மை தேசிய இனங்களில் ஒன்றான தேய் இனம், தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில் முக்கியமாக குழுமி வாழ்கின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், தேய் இன நாள் காட்டியின் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி, அறிமுகப்படுத்துகின்றோம்.

 
சீனாவின் பாரம்பரிய வசந்த விழா தவிர, தேய் இன மக்களைப் பொறுத்தவரை, தேய் இன நாள் காட்டியின் புத்தாண்டு, மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாவாகும். தேய் இன நாள் காட்டி என்பது, தேய் இனத்தின் பாரம்பரிய நாள் காட்டியாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. தேய் இன நாள் காட்டியின் படி, இவ்வாண்டு, 1369ம் ஆண்டாகும். தேய் இனத்தவரின் பழக்க வழக்கங்களின் படி, தேய் இன புத்தாண்டு, ஆண்டு தோறும் ஏப்ரல் திங்கள் 13ம் நாள் முதல் 15ம் நாள் வரையில் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டின் ஏப்ரல் திங்கள் 13ம் நாள், தேய் இனப் புத்தாண்டின் முதல் நாள். காலையில், பல்வேறு வடிவமான மலர் வாகனங்கள், JING HONG நகரத்தின் சாலைகளில், தோன்றியுள்ளன. இந்த வாகனங்களில் வண்ண வண்ண மலர்கள், சிவப்பு, மஞ்சள் பட்டு நாடாக்களுடன் தொங்கவிடப்பட்டுள்ளன. தேசிய இன பாரம்பரிய சீரூடை அணிந்த தேய் இன மங்கையர்கள் வாகனங்களில் நின்றவாறு, மலர்களையும், இன்பம், மங்களத்தைக் குறிக்கும் சிறிய பைக்களையும் சுற்றுப்புறத்திலுள்ள மக்களிடம் வீசி எறிந்தனர். இஸ்ரேலிய பயணியர் ORY COHEN சிசுவாங்பேன்னாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. மலர் வாகனங்களுக்கு அருகில் நின்று நிழற்படத்தை எடுத்த பிறகு அவர் கூறியதாவது:

 
நான், குவாங் சோ, யாங் சுவோ, குவே லின் ஆகிய இடங்களுக்குப் போனேன். சிசுவாங்பேன்னா தான், மிகவும் நல்ல இடம் என்று எனக்குத் தோன்றுகிறது. இங்குள்ள மக்கள் மிகவும் அன்பாக இருக்கின்றனர். அவர்கள், மகிழ்ச்சியுடன் எங்களுக்கு, நிழற்படம் எடுக்க உதவுகின்றனர் என்றார் அவர்.
ஏப்ரல் 14ம் நாள், தேய் இன புத்தாண்டின் இரண்டாம் நாளாகும். தேய் இனத்தவர்கள் சந்தைக்குப் போவது வழக்கம். அன்று, JING HONG நகரத்துக்கு ஊடாக ஓடும் LAN CANG ஆற்றுக்கரையில், பல்வேறு வகை சிற்றுண்டிகள், தேசிய இன கைவினைப்பொருட்கள், வேறு சில்லறை வணிக பொருட்கள் முதலியவற்றை விற்பனை செய்யும் வணிகர்களும், நாட்டுப்புற கலைஞர்களும், நடைபாதை அங்காடி நிறுவியுள்ளனர். இந்த அங்காடிகள், ஆற்றுக்கரை நெடுகிலும், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு வரை நீண்டு கிடந்தன.
ஒரு சிற்றுண்டி அங்காடியில், உரிமையாளர், புத்தம் புதிய மீனைக் கழுவிச் சுத்தம் செய்து, தாளிப்பு ரசத்தில் எடுத்துவைத்தப் பிறகு, ஒருவகை நறுமண இலையால் கட்டிப்போட்டு, அதைத் தீயிலிட்டு வறுத்தார். இந்த மீன் வறுவல், தனிச்சிறப்பியல்புடைய தேய் இன சிற்றுண்டிகளில் ஒன்றாகும். மீனைச் சுவைத்துக் கொண்டிருந்த திரு லீ மிங், குழந்தைக் காலம் தொட்டு, JING HONG நகரத்தில் வாழ்ந்து வருகின்றார். ஒவ்வொரு தேய் இனப் புத்தாண்டிலும், அவர் இச்சந்தைக்கு வருவார். அவர் கூறியதாவது:
நான் இங்கே வாழ்ந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது, சந்தை மேலும் விறுவிறுப்பாக இருக்கிறது. இங்கு வந்துள்ள பயணிகள், வண்ண வண்ண தேசிய இனச் சீரூடைகளை அணிந்து, எமது சிசுவாங்பேன்னாவின் சிறப்பு காட்சிக்கு மெருகூட்டியுள்ளனர். குடும்பத்தினர்களுடன் இணைந்து இந்தச் சந்தைக்குச் சென்று, டிரெகன் படகு போட்டியைப் பார்த்து, தேசிய இனத் தனிச்சிறப்பான சிற்றுண்டிகளைச் சுவைத்து மகிழ்கின்றோம் என்றார் அவர்.


அவர் கூறிய டிரெகன் படகு போட்டி என்பது, இந்தச் சந்தையில் சிறப்பு நிகழ்ச்சியாகும். JING HONG புறநகரத்திலுள்ள மக்கள், கிராம வாரியாக, சில அணிகளை உருவாக்கி, LAN CANG ஆற்றில் டிரெகன் படகு போட்டியில் பங்கேற்றனர். டிரெகன் படகு போட்டிக்குப் பிறகு, அதாவது, தேய் இனப் புத்தாண்டின் 3வது நாள், பாரம்பரிய நீர் தெளிப்பு விழாவாகும்.