• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-18 09:48:18    
பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சுற்றுலாத் துறை

cri
2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள், சீனச் சுற்றுலாத் துறைக்கு அரிய வளர்ச்சி வாய்ப்பை வழங்கியுள்ளது என்று சீனத் துணைத் தலைமையமைச்சர் வூ யி அம்மையார் கூறியுள்ளார்.
சீன ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சுற்றுலா பற்றிய சர்வதேசக் கருத்தரங்கு நேற்று சீனாவின் Qing Dao நகரில் துவங்கியது. வூ யி அம்மையார் இதற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறினார். தற்போது, ஒலிம்பிக் திடல்கள் அரங்குகள், தொடர்புடைய வசதிகளின் கட்டுமானம், போட்டிகளின் ஏற்பாடு, பண்பாட்டுப் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வகை ஆயத்தப் பணிகள் திட்டப்படி தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.
சீனாவில் சுற்றுலா இடங்கள் அதிகம். கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து, சுற்றுலா வசதிகள் நாளுக்கு நாள் மேம்பட்டு, சேவைத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. சுற்றுலாத்துறையிலான சர்வதேச தொடர்பும் ஒத்துழைப்பும் தொடர்ந்து ஆழமாகி வருகின்றன. 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள், சீனச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு மாபெரும் உந்துவிசையை வழங்குவது உறுதி என்று வூ யி அம்மையார் கூறினார்.