
சீனாவில் செல்லிட பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 48 கோடியை எட்டியுள்ளது. சீன தேசிய தகவல் தொழில் துறையின் பன்நோக்க திட்டப் பகுதியின் தலைவர் மோ வேய் நேற்று இவ்வாறு குறிப்பிட்டார்.தியன்சிங் நகரில் நடைபெற்ற, "2007 சர்வதேச செல்லிட பேசி தொழில் பொருட்காட்சி மற்றும் கருத்தரங்கில்" அவர் பேசுகையில், சீன செல்லிடப்பேசி தொழிலின் வளர்ச்சி பற்றி எடுத்துக்கூறினார். தற்போது, சீனாவில் செல்லிட பேசி, 100 பேருக்கு 35.3 என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகின்றது. கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, இது, 5 விழுக்காடு அதிகமாகும். தரைவழி தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை விட, செல்லிட பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பத்து கோடி அதிகம் என்று அவர் சொன்னார்.
|