"சமத்துவம், பரஸ்பர நலன், சமாதான பயன்பாடு, கூட்டு வளர்ச்சி" என்ற கோட்பாட்டுக்கிணங்க, விண்வெளிப் பயணத்துறையில் சர்வதேச ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும் என்று சீனத் தேசிய விண்வெளிப் பயண அலுவலகத் தலைவர் Sun Lai Yan கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சொற்பொழிவாற்றிய போது, இது வரை, சீனா, 60க்கு அதிகமான நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இரு தரப்பு, வட்டாரம், பல தரப்பு, வணிக சேவை உள்ளிட்ட பல வடிவங்களில் ஒத்துழைப்பு மேற்கொண்டு, குறிப்பிடத்தக்க சாதனைகளை பெற்றுள்ளது என்று அவர் கூறினார். 1985ஆம் ஆண்டு முதல் இது வரை, அன்னிய வணிகர்களுக்கு 28 செயற்கைக் கோள்களை சீனா செலுத்தி, வெளிநாடுகளுக்கு பெரிய ரக செயற்கைக்கோள்களை ஏற்றுமதி செய்யத் துவங்கியது என்று அவர் தெரிவித்தார். சுமார் 80 செயற்கைக் கோள்களை சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்து, செலுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
|