சீனாவின் முன்னுரிமையுடன் கூடிய கொள்கை
cri
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகவல் சேவை, பயன்பாட்டு நிர்வாகம், வணிக புழக்கம் முதலிய அலுவல்கள் பற்றிய சேவைத் தொழிலின் வளர்ச்சியை, அடுத்த சில ஆண்டுகளில் சீனா பெரிதும் விரைவுபடுத்தப்பாடுபடும். அன்றி, இத்தகைய சேவை தொழில் நிறுவனங்களுக்கு நிதியையும் முன்னுரிமையுடன் கூடிய வரி வசூரிப்புக் கொள்கையையும் வழங்கும். சீன முதலீட்டு வளர்ச்சி சங்கத்தின் துணை தலைவர் சோ மிங் அம்மையார் இன்று சீனாவின் He Fei நகரில் இதை தெரிவித்தார்.
ஒப்பந்த முறையிலான சர்வதேச சேவையை அதிக அளவில் ஏற்றுக்கொள்வது, சீன சேவைத் தொழிலின் வளர்ச்சி தரத்தை உயர்த்துவதற்கான முக்கிய வாய்ப்பாகும் என்றார், அவர்.
அடுத்த சில ஆண்டுகளில், புகழ் பெற்ற 100 பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள், அவற்றின் கூறிப்பிட்ட அளவிலான சேவை அலுவலை சீனாவுக்கு நகர்த்துவதை சீனா முன்னேற்றுவிக்கும் என்று தெரிய வருகின்றது.
|
|