சீனாவில், சமூகக் காப்புறுதி நிதி மீதான தணிக்கை கண்காணிப்பு
cri
நிதித் திரட்டல், நிர்வாகம், பயன்பாடு ஆகியவற்றில் நிலவும் பிரச்சினைகளை தணிக்கை மூலம் அம்பலப்படுத்தி, நிதியின் பாதுகாப்பு மற்றும் முழுமையை உத்தரவாதம் செய்து, பொது மக்களின் நலனைப் பேணிக்காக்க வேண்டும் என்று, சீனத் தணிக்கை அலுவலகம் வலியுறுத்துகின்றது. உள்ளூர் தணிக்கை நிறுவனங்களின், சமூகக் காப்புறுதி நிதி மீதான தணிக்கைக் கண்காணிப்புப் பணியை வலுப்படுத்துவது தொடர்பாக, அண்மையில் வெளியிட்ட கருத்தில் அது இவ்வாறு கூறியது. தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கான அடிப்படை முதுமைக் காப்புறுதி, நகரத் தொழிலாளர்களுக்கான அடிப்படை மருத்துவ சிகிச்சைக் காப்புறுதி, வேலையின்மைக்கான காப்புறுதி, தொழில் ரீதியியான விபத்துகளுக்கான காப்புறுதி, மகப்பேறுக்கான காப்புறுதி ஆகிய 5 வகை நிதி தணிக்கை செய்யப்படும் என்று தெரிய வருகின்றது.
|
|