• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-21 15:23:25    
Nba கூடைப்பந்து போட்டி

cri

16ம் நாள் அமெரிக்க Nba கூடைப்பந்து போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

மேற்கு பகுதியில் உபசரிப்பு அணியான Utah jazz அணி, Golden State Warriors அணியை 100-87 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. 4-1 என்ற ஆட்டக் கணக்கில் எதிராளியை வென்று, மேற்கு பகுதியின் இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது. இப்போட்டியில், Kirilenko, boozer இருவரும் சிறப்பாக விளையாடி, தலா 21 புள்ளிகளை பெற்றனர். Fisher, தமது அனுபவ முதிர்ச்சியைப் பயன்படுத்தி, 20 புள்ளிகளை பெற்றார். மேற்கு பகுதியின் இறுதி ஆட்டத்தில் Utah jazz அணியினர், phoenix suns அணி, San Antonio Spurs அணி ஆகிய இரு அணிகளிலான வெற்றி பெற்ற அணியை எதிர்கொள்வர்.

கிழக்கு பகுதியில், சிகாகோ Bulls அணி, டெட்ராய்ட் Pistons அணியை 108-92 என்ற புள்ளிக் கணக்கில், வென்றது. அவர்கள் 2 ஆட்டங்களில் தொடரந்து வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், 2-3 என்ற ஆட்டக் கணக்கில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். சிகாகோ Bulls அணியின் வீரர் Gordon, 28 புள்ளிகளை பெற்றார். சிகாகோ Bulls அணியின் தீவிரமான தடுப்பாட்டத்தினால் டெட்ராய்ட் Pistons அணியின் வீரர்கள் எடுத்த தனிநபர் புள்ளிகள் 20ஐ தாண்ட வில்லை.