2010ம் ஆண்டில் சீன ஷாங்காய் மாநகரில் நடைபெறும் உலகப் பொருட்காட்சி பூங்காவின் முதலாவது தொகுதி திடல் மற்றும் அரங்குகளின் நிர்மாணம் நேற்று ஷாங்காயில் துவங்கியது. உலகப் பொருட்காட்சிக்கு தற்காலிகமாகச் சேவை புரியும் இந்த கட்டிடங்கள், உயிரின வாழ்க்கைச்சூழல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரியாற்றல் சிக்கனம் ஆகிய தனித்தன்மையை முழுமையாக காட்டும். இக்கட்டிடங்களின் பரப்பளவு 46 ஆயிரம் சதுரமீட்டராகும். இப்பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட 7 லட்சத்துக்கும் அதிகமான சதுர மீட்டர் உடைய பல்வகைத் திடல்களும் அரங்குகளுக்கும், அவை மாதிரியாக திகழும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு பணியகத்தின் தலைவர் Hong Hao எடுத்துக்கூறினார். சூழல் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இத்தற்காலிக கட்டிடங்களுக்கான அரை உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிய வருகின்றது.
|