வாணி -- வணக்கம் நேயர்களே. மீண்டும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகழ்ச்சி அடைகின்றேன். இன்று க்ளீட்டஸ், வாணி இருவரும் இன்னொரு சுவையான சீன உணவு வகையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ் -- வணக்கம் நேயர்களே. சீனாவில் சுமார் ஓராண்டு காலம் தங்கியிருக்கின்றேன். சீனாவில் மக்களின் வாழ்வில் உணவு முக்கிய இடம் வகிக்கின்றது. திருமணம், விழா கொண்டாட்டம், நண்பர் சந்திப்பு முதலியவற்றின் போது, மக்கள் விருந்து அளிப்பது வழக்கமாகியுள்ளதைக் கண்டுப்பிடித்துள்ளேன்.
வாணி -- நீங்கள் சொன்னது சரி.
க்ளீட்டஸ் -- இது மட்டுமல்ல, வெவ்வேறான இடங்களில் உணவு வகைகள் வேறுபட்டன. சுவைகளும் வேறுபட்டன.
வாணி -- ஆமாம். பொதுவாகக் கூறின், வடக்கு சீனாவில் மக்களுக்கு கோதுமை மாவு உணவு வகைகள் பிடிக்கும். தென் பகுதியில் மக்களுக்கு அரிசி உணவு பிடிக்கும். இடங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த உணவு வகைகள் இருக்கின்றன. இந்தியாவிலும் இதே போல் என்று நினைக்கின்றேன்.
க்ளீட்டஸ் -- ஆமாம். வாணி, இன்று எந்த வகை உணவு பற்றி கூறுகின்றோம்.
வாணி -- இன்று முட்டை, மீன் இறைச்சி இடம்பெறும் உணவு வகையை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். முதலில் தேவையான பொருட்கள் பற்றி சொல்வேன்.
முட்டை 4 மீன் இறைச்சி 200 கிராம் வெங்காயம் 15 கிராம் உப்பு 10 கிராம், சோயா சாஸ் 10 கிராம் உணவு எண்ணெய் 10 கிராம்
க்ளீட்டஸ் -- இன்றைய உணவு தயாரிப்பு முறை எளிதானதாக நம்புகின்றேன்.
வாணி -- ஆமாம்.
வாணி -- நான் செய்முறை பற்றி கூறுகிறேன். முதலில், மீன் இறைச்சியை துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, 5 கிராம் உப்பு, 10 கிராம் உணவு எண்ணெய், மீன் இறைச்சி துண்டுகள் ஆகியவற்றை கலந்து 10 நிமிடமாக அப்படியே வைக்கவும்.
க்ளீட்டஸ் -- முட்டைகளை உடைத்து தட்டில் ஊற்றி, 5 கிராம் உப்புடன் நன்றாக அடிக்க வேண்டும். வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணி -- வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் போதிய அளவு நீர் ஊற்றி, சூடுபடுத்துங்கள். வாணலியில் நீர் நன்றாக சூடாகிய பின், முட்டையை ஆவியில் வேகவைக்கலாம்.
க்ளீட்டஸ் -- குளிர் நீரில் முட்டையை வேகவைக்கக் கூடாது.
வாணி -- இதுமட்டுமல்ல, மிதமான சூட்டிலும் முட்டையை வேகவைக்க வேண்டும். 7 நிமிடங்களுக்குப் பிறகு, முட்டையின் மீது நறுக்கப்பட்ட மீன் இறைச்சி, வெங்காயம் ஆகியவற்றை போட வேண்டும். இப்படி, மேலும் 3 நிமிடங்களாக வேகவைக்க வேண்டும்.
க்ளீட்டஸ் -- 3 நிமிடங்களுக்குப் பின், சூடு தேவையில்லை. ஆனால், உடனடியாக முட்டையை வெளியே எடுக்கக் கூடாது. வாணலியில் இதனை இன்னும் 2 நிமிடமாக வைக்கவும்.
மீன்
வாணி -- பின்னர், முட்டையை வெளியே எடுத்து, இதன் மீது சோயா சாஸ் ஊற்றலாம்.
க்ளீட்டஸ் -- இப்போது, முட்டை, மீன் இறைச்சி வறுவல் தாயார். குழந்தைகளும், முதியோரும் இதனை விரும்புவதாக நம்புகின்றோம்.
வாணி -- சரி. இன்றைய முட்டை உணவில் செய்முறை எளிதானது, நீங்கள் வீட்டில் தயாரிக்கலாம். அடுத்த வாரம் இன்னொரு முட்டை உணவு வகையைக் கூறுவோம். இறைச்சி ஒன்றும் இடம்பெறாத இந்த வறுவலுக்கு 3 முட்டைகள், 1 பச்சை மிளகாய், 1 வெங்காயம், உப்பு, உணவு எண்ணெய் ஆகியவை தேவைப்படுகின்றது. ஆர்வம் கொண்ட நேயர்கள் முன்கூட்டியே தயாரிக்கலாம்.
க்ளீட்டஸ் -- அடுத்த முறை சைவ உணவு பிடிக்கும் நேயர்களும் வீட்டில் சீன உணவு வகையைத் தயாரிக்கலாம்.
வாணி -- அடுத்த சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் சந்திப்போம்.
க்ளீட்டஸ் -- வணக்கம்.
|