• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-22 15:04:06    
நேயர்களின் கருத்துக்களை படிப்பதற்கு முன் ஒரு தகவல் அறிவிக்கின்றோம்

cri
கலை.............நிகழ்ச்சி மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். நேயர்களின் கருத்துக்களை படிப்பதற்கு முன் ஒரு தகவல் அறிவிக்கின்றோம்.
கலைமகள்...........2007ம் ஆண்டு சீன வானொலி நிலையத்தின் நேயர் தொடர்பு துறையின் தலைமையில் வெளிநாடுகளிலுள்ள சீன வானொலி நேயர் மன்றங்கள் பற்றிய கள ஆய்வு மே திங்கள் முதல் அதிகாரப்பூர்வமாக துவங்கும்.
கலை.............ஏற்கனவேயுள்ள சீன வானொலி தமிழ் நேயர் மன்றங்களும் நிறுவப்பட போகின்ற சீன வானொலி தமிழ் நேயர் மன்றங்களும் இந்த கள ஆய்வில் சேர்க்கப்படுகின்றன. ஆகவே அனைத்து நேயர் மன்றங்களின் பொறுப்பாளர்களும் உற்சாகத்துடன் இந்த கள ஆய்வு பணியில் பங்கு கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம்.
கலைமகள்...........சீன வானொலி நேயர் மன்றங்கள் கள ஆய்வு பணியில் கலந்து கொள்வது பற்றி அடுத்த வாரத்தில் இடம் பெறும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத் தலைவர் எஸ் செல்வமும் தமிழ்ப் பிரிவின் தலைவர் தி. கலையரசியும் விபரமாக விவாதிப்பது ஒலிபரப்பாகும். மன்ற தலைவர்களும் பொறுப்பாளர்களும் கண்டிப்பான முறையில் நிகழ்ச்சியை கேட்டு பதிவு செய்து கள ஆய்வு படிவங்களை நிரப்பி அனுப்ப வேண்டும்.
கலை.........இநத் கள ஆய்வு 5 பக்க படிவங்களைக் கொண்டுள்ளது. நுணுக்கமாகவும் பொறுமையுடனும் நிரப்பி நிறைவேற்ற வேண்டும்.
கலைமகள்........கள ஆய்வு பற்றிய படிவங்கள் ஜுலை திங்கள் 10ம் நாளுக்குள் தமிழ்ப் பிரிவுக்கு அனுப்ப வேண்டும். முன்கூட்டியே நிரப்பி அனுப்பினால் வரவேற்கதக்கது.
கலை.........ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் மாநிலம் என்னும் பொது அறிவு போட்டி பற்றி பெரிய காலாப்பட்டு பி. சந்திரசேகரன் தெரிவித்த கருத்து பார்க்கின்றோம். ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் மாநிலத்தில் இன்ப பயணம். இது வரை செல்லாத இன்ப பயணமாக இருந்தது. பசுமை நிறைந்த மலைகளையும் பாண்டாக்களின் வாழ்க்கையும் மிக நன்றாக தெரிந்து கொள்ளும் வகையில் மிகவும் சிறப்பாய் அமைந்தது. சீனாவில் மட்டுமே காணப்படும். இந்த அழகிய பாண்டாக்களை நிகழ்ச்சி மூலம் இன்பமாக ரசித்தோம். மேலும் 70 அடி உயரமுள்ள அந்த புத்தர் சிலையின் அழகிய காட்சியை அற்புதமாக வர்ணித்து கூறினீர்கள். பாராட்டுக்கள் என்று பி சந்திரசேகரன் கூறினார்.
கலைமகள்...........அடுத்து ஆ புதுப்பாளையம் ஆர் உமா மொழி பரவல் பற்றி தெரிவித்த கருத்து. நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஆங்கிலம். ஆங்கிலத்தில் பேசு, நட, படி என்று மக்கள் மாறி வருகின்றார்கள். ஆனால் சீன வானொலியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள். இதைக் கேட்கும் பொழுது காதினில் தேன் வந்து பாய்கின்றது என்பது போன்ற கருத்துக்களை தாங்கள் கூறும் பொழுது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்று ஆ புதுப்பாளையம் ஆர் உமா கூறினார்.

கலை ..... திருவாரூர் எம்.எஸ்.பசீர் அஹ்மது சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு பற்றி தெரிவித்த கருத்தை பார்க்கின்றோம்.
ஈரோடு மாவட்ட அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு மற்றும் ஐம்பெரும் விழா சீன வானொலி தமிழ்ப் பிரிவுத் தலைவர் மற்றும் சீன வானொலி பிரதிநிதிகளை மேடையில் தோன்றச் செய்து நடந்த நிகழ்ச்சியை வானொலியில் தொகுத்து தந்தது மிக அருமை. கடைசியாக பேசிய அம்மையார் அவர்கள் தன் கணவர் சீனா வானொலியின் மீது வைத்திருந்த அன்பையும் பாசத்தையும் அதனால் கண்ட வெற்றியையும் கேட்டபோது உள்ளம் நெகிழ்ந்தது. பெரம்பலூர் மாவட்ட சீன வானொலி மன்றங்கள் வழங்கிய கர்மவீரர் காமராஜர் பற்றிய கருத்துக்கள் கவிதைகள் சிறப்பாக இருந்தன.
கலைமகள்........கருத்தரங்கு பற்றி வெண்ணந்தூர் எஸ் சுப்பரமணியம் மதிப்புக்குரிய கருத்து தெரிவித்தார். சீன வானொலி நேயர் மன்றம் நடத்திய விழா பற்றி ஒலிபரப்பு செய்து இருந்தீர்கள். அதில் கருமவீரர் காமராஜர் பற்றி விளக்கம் தந்தார்கள். ஒவ்வொரு நேயரும் காமராஜர் பற்றி ரொம்ப அருமையாக சொன்னார்கள். அந்த நிகழ்ச்சி வெகு நன்றாக இருந்தது. இந்த மாதிரி போல புது புது நிகழ்ச்சிகள் மக்களுக்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்றார் சுப்பரமணியம்.
கலை........அடுத்து 2008ம் ஆண்டு பெய்சிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி காங்கேயம் பி நந்தக் குமார் தெரிவித்த கருத்து.
2008ம் ஆண்டில் பெய்சிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 4500 ஊக்க மருந்து சோதனைகள் செய்யப்படும். இது 2004ம் ஆண்டு ஏதேன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையை விட 25 விழுக்காடு அதிகம். ஊக்க மருந்து சோதனையானது ஒலிம்பிக் விளையாட்டுத் தூய்மைக்கு உத்தரவாதம் அளிக்கும். விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் சம நிலையில் ஆட்ட போட்டிகளில் கலந்து கொன்டு வெற்றி பெறுவதற்கு வழி வகுக்கும் என்றார் பி நந்தக் குமார்.
கலைமகள்.......அடுத்து இலங்கை காத்தான்குடி-3 மு.இ.மு.அஜ்வாத் கவிதை முறையில் பாராட்டிய கடிதத்தை பார்க்கின்றோம்.
சீன மண்ணில் காலடி பதித்த எம் சீன வானொலியே நீ எமக்கு பல பல நிகழ்ச்சிகளைத் தந்தாயே. அதை நாமும் கேட்டு சந்தோஷமடைந்தோமே. எம்முடைய பொழுதும் போய் விட்டதே. நாம் உன்னை தினமும் கேட்க வேண்டுமே. பயன் பல பெற வேண்டுமே. நீ சீன மண்ணில் மீண்டும் தொடரனுமே. தொடரனுமே.