• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Apr 8th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-22 15:23:33    
சுங்சின் நகர் கிராமப்புறத்தில் மருத்துவ மற்றும் சுகாதார முதலிட்டை அதிகரிப்பது

cri
சுன் தான் ஊரிலான சுகாதார நிலையத்தில், Zhu xiao bing என்பவர் எமது செய்தியாளரிடம் தனது மகள் சிகிச்சை பெற்றது பற்றி கூறினார். அவர் கூறியதாவது,


தற்போது, மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவது மிகவும் வசதியாகவுள்ளது. மருத்துவர்கள் மிக ஆர்வத்துடன் நோயாளிகளை கவனிக்கின்றனர். எனது வீட்டிலுள்ள 3 பேரும் ஒத்துழைப்பு மருத்துவ அமைப்புமுறையில் சேர்ந்தோம். மகள் பிறந்த போது, சில ஆயிரம் யுவான் கட்டணம் நீக்கப்பட்டது. அரசின் இந்தக் கொள்கை என்னைப் போன்ற பொது மக்களுக்கு அதிக நன்மை தந்துள்ளது என்றார் அவர்.


கடந்த சில ஆண்டுகளில், நிதி முதலீடு, தனி நிதித்திரட்டல் முதலிய வழிகளின் மூலம் Qian jiang பிரதேசம், மொத்தம் 2 கோடி யுவானை வட்டம், பட்டினம் மற்றும் ஊரிலான சுகாதார நிலையங்களின் கட்டுமானத்தில் ஒடுக்கியுள்ளது. தற்போது, 15 வட்டம் பட்டினம் மற்றும் குடியிருப்பு பிரதேசங்களில் சுகாதார சேவை மையங்களில் மருத்துவ வசதிகள் போடப்பட்டுள்ளன.
சுன் தான் ஊரின் சுகாதார நிலையம் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. கட்டிடம் சுத்தமானது. தோட்டம் பசுமையானது. மருத்துவ நிலையம் சோபா, தொலைக்காட்சி, குளிரூட்டி முதலிவற்றுடன் மிகவும் வசதியாகவுள்ளது. இந்த நிலையத்தின் தலைவர் வான் கு சான் கூறியதாவது,

2002ஆம் ஆண்டுக்கு முன், இந்த நிலையம் அபாய நிலையில் இருந்தது. மருத்துவச் சாதனங்கள் மிகவும் குறைவு. இதனை மருந்து கடையாக மக்கள் கருதினர். 2000ஆம் ஆண்டு முதல், அரசு தொடர்ச்சியாக முதலீட்டை அதிகரித்து வருகின்றது. தற்போது, இந்த சுகாதார நிலையத்தின் நிலையான சொத்துக்களின் மதிப்பு 13 இலட்சம் யுவானைத் தாண்டியுள்ளது. எக்ஸ் ரே சாதனம், type-B ultrasonic சாதனம் முதலியவை இங்கே பயன்படுத்தப்படுகின்றன. அபாய நிலையிலுள்ள நோயாளிகளுக்கும் இங்கே சிகிச்சை அளிக்க முடியும் என்றார் அவர்.

 
2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான 5 ஆண்டுகளில், புதிய கரக் கிராம ஒத்துழைப்பு மருத்துவ முறைமையில் நோய்வாய்பட்ட விவசாயிகளுக்கான நேரடி நட்ட ஈட்டுத் தொகை தவிர, கிராம சுகாதார அடிப்படை வசதியின் கட்டுமானத்தில் 3000 கோடி யுவானை முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டுத் தொகை அதிகரிக்கப்படுவதால், சீனக் கிராமப்புறங்களில் மருத்துவ மற்றும் சுகாதார நிலைமை மேம்படுத்தப்படுவது உறுதி என்று நம்புகின்றோம்.

 
நேயர்கள் இதுவரை சுங்சின் நகர் கிராமப்பறத்தில் மருத்துவ மற்றும் சுகாதார முதலீட்டை அதிகரிப்பது பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040