• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-22 16:46:09    
மகா மணி ஓசை

cri

ஒரு நாள் காலைநடை பயின்று கொண்டிருந்த போது திடீரென வெகுதொலைவில் இருந்து பணியோசை கேட்டது. நீண்ட நேரம் அது காதுகளில் ரீங்கரித்துக் கொண்டே இருந்தது. சகோதரி வாணியிடம் இது பற்றிச் சொன்னேன். "அதுவா? அது பெரிய மணி ஒன்று உள்ளது ஒரு கோயிலில். அது எப்போதாவது ஒலிக்கும். உங்கள் உடம்பில் வலு இருந்தால் அங்கு போய் மணி அடியுங்கள்" என்றார். நானும், எனது நேபாளி நண்பர் கமல் லாம்காயும் அந்தக் கோயிலுக்குப் போவது எனத் தீர்மானித்தோம்.


பெய்ச்சிங் நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஹைதியன் புறநகரில் அமைந்துள்ள அந்தக் கோயிலின் பெயர் மகா மணி ஆலயம். முன்பு இதை விழிப்புணர்வுக் கோயில் என்றார்கள். பிரம்மாண்டமான மணி வைக்கப்பட்ட பிறகு, மகா மணி ஆலயம் என்று பெயர் சூட்டி விட்டன. உலகப்புகழ் பெற்ற அந்த மணி 1406ஆம் ஆண்டில் மிங் வமிசத்தைச் சேர்ந்த யோங்லி மன்னனின் ஆட்சியின் போது வார்க்கப்பட்டது. அந்த மணியின் எடை 46.5 டன். உயரம் 6.94 மீட்டர். கனம் 22 செ.மீ மணியின் நாக்கு, 3.3 மீட்டர் விட்டமுடையது. அந்த மணியின் மேல் மொத்தம் 2 லட்சத்து 27,000 எழுத்துக்களில் 17 புத்த மறைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த மறைகளை மிங் வமிசத்தின் அழகு எழுத்துக்கலை ஒரான ஷென்து எழுதியதாகச் சொல்லப்படுகிறது. நேர்த்தியாக வடிவமைத்து வார்க்கப்பட்ட இந்த வெண்கலமணியின் இனிமையான ஒலி இருபது கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலும் கேட்கிறது. இந்த மகா மணி ஆலயத்தில், மணிகனின் அருங்காட்சியகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இந்த மகாமணியின் பின்னணியில் ஒரு வரலாற்றுக் கதை உள்ளது.


நீண்டநெடுங்காலத்திற்கு முன்பு, வெண்கலத்தை உருக்கி மணிகளை வார்த்து எடுக்கும் கலையில் வல்லவரான ஒரு முதியவர் இந்தார். கோயிலுக்கு மணி தயாரிக்க வேண்டுமானால் அவரைத்தான் அழைப்பார்கள். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம். அவருடைய 18 வயது மகளும் சென்றாள். அவள் அழகி. புத்திசாலி. அவருக்கும் மற்றொரு மணிதயாரிக்கும் குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெய்ச்சிங் நகரில் பெரியதொரு மணிக்கூண்டு கோபுரம் கட்ட வேண்டுமென பேரரசர் விரும்பியதால் திருமணம் ஓராண்டு தள்ளிப்போடப்பட்டது.
அப்போது மணிக்கூண்டு கோபுரம் கட்டப்பட்டு விட்டது. ஆனால் அதற்குப் பொருத்தமான மணி இல்லை. ஆகவே இருபதாயிரம் கிலோ எடையுள்ள ஒரு மணி தயாரிக்கப்பட வேண்டும் என மன்னர் கட்டளையிட்டார். நாடெங்கும் இருந்து வெண்கல வார்ப்புக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களில் அழகியை மணம் முடிக்கப்போரும் இளைஞனும் இருந்தான். மணிக்கூண்டு கோபுரத்திற்கு மேற்கே ஒரு வார்ப்பு ஆலை உருவாக்கப்பட்டது. எல்லாத் தொழிலாளர்களுக்கும் கலைவராக முதியவர் நியமிக்கப்பட்டார். வழக்கம் போல அவருடன் மகளும் வந்திருந்தாள்.
எவ்வளவு கடினமாக உழைத்தும் மணியை வார்த்து எடுக்க முடியவில்லை. முதியவர் கவலைப்பட்டார். மன்னன் விதித்த காலக்கெடு நெருக்கிக் கொண்டிருந்தது.

உருக்கப்பட்ட வெண்கலக் குழம்பை அச்சுக்களில் ஊற்றினால் அது கெட்டிப்படவில்லை. என்ன செய்வது என அறியாமல் கலைஞர்கள் திண்டாடிக் கொண்டிருந்த போது, "மனித ரத்தம் கலக்கும் போதுதான் உருகிய வெண்கலக் குழம்பு உறையும்" என்ற மூதுரை மகளுக்கு நினைவுக்கு வந்தது. எனவே தன்னைத் தானே பலி கொடுக்கத் தீர்மானித்து, கொழுந்து விட்டெரியும் உலையில் குதித்து விட்டான். உருகிய வெண்கலக் குழம்பு சிதறியது. தீ ஊதாவாக மாறியது. வெண்கலம் உறைந்தது. வார்ப்புக் கலைஞர்கள் அனைவரும் வாயடைத்துப் போயினர். முதியவருக்கு மகளுடைய பூவேலைப் பாடு உடைய ஒற்றைக் காலணி மட்டுமே கிடைத்தது.


அந்த இளம் பெண்ணை மணிப்பெண் என்று மக்கள் அழைத்தனர். மணியை அடிக்கும் போதெல்லாம், 18 வயதுப் பெண்ணின் நினைவாக, 18 முறை வேகமாகவும், 18 முறை மெதுவாகவும, 18 முறை வேகமாகவும் மெதுவாகவும் கலந்தும் அடித்தனர். விழிப்புணர்வுக் கோயிலில் வைக்கப்பட்ட இந்த மணி, சீன மணிகளின் மன்னன் என்று போற்றப்பட்டது.


இவ்வளவு பிரம் மாண்டமான மணி, வார்ப்பு ஆலையில் இருந்து மகா மணி ஆலயத்திற்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது தெரியுமா? அது ஒரு பெரிய கதை.