• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-23 09:32:02    
சோப்பு 4

cri

அவனுடைய திண்டாட்டத்தைக் கண்ட அம்மா எரிச்சலோடு குறுக்கிட்டாள். "தலையும் புரியலே, காலும் புரியலே. முதலில சொல்றதை சரியாச் சொல்லுங்க. அப்பத்தான் அவன் தேட முடியும்."பெருமூச்சு விட்டபடியே ஸுமின் அவள் பக்கமாகத் திரும்பினார்.

"மெயின் ரோட்டுக் கடையில சோப்பு வாங்கிக்கிட்டு இருந்தேன் இல்லியா... அப்போ மூணு மாணவர்கள் அங்க இருந்தாங்க. அவங்களுக்கு நான் ஒரு பைத்தியம் போல தெரிஞ்சுருக்கணும். அஞ்சாறு சோப் வகைகளை எடுத்துப் பார்த்தேன். எல்லாமே நாற்பது சென்ட்சுக்கு மேலே. வேண்டாம்னு ஒதுக்கிட்டேன். பத்து சென்ட் விலையுள்ள சோப்பைப் பார்த்தேன். ஆனா அது நல்லா இல்லே.

அதுல வாசனையே வரலை. கடைசியா, இருபத்தி நாலு சென்ட்டுக்கு இந்த பச்சை சோப்பை எடுத்தேன். கடைப் பையனும் இந்தப் பசங்களைப் போல திமிரா நடந்துக் கிட்டான். அவனுக்கு கண் உச்சந்தலையில போலிருக்கு. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டான். அந்தப் பசங்க ஒருத்தருக்கு ஒருத்தர் கண்ணடிச்சு பிசாசு மொழியில பேசிக்கிட்டாங்க. அப்புறம் பணம் கொடுக்கறதுக்கு முன்னாடி, சோப்பை பிரிச்சுப் பார்க்க நினைச்சேன். அது நல்லதா, மோசமானதான்னு எனக்கு எப்படித் தெரியும்? ஆனா அந்த சினனப் பய முடியாதுன்னுட்டான். ஏதோ அசிங்கமா பேசுனான். அதுக்கு அந்த கேடுகெட்ட பசங்க சிரிச்சாங்க. அவங்கள்ல சின்னவனா இருந்தவன் என்னையே நேரே பார்த்து இதச் சொன்னான். மத்த பசங்க சிரிச்சாங்க. ஆக, அது ஏதோ கெட்ட வார்த்தையாத்தான் இருக்கணும்."

"ஆமா" ஸுவே செங் மென்று விழுங்கியபடியே மரியாதையுடன் சென்றான்.

"உலகம் இப்படி கிடக்கிறப்போ. புதிய கலாச்சாரம், புதிய கலாச்சாரம்னு கத்துறாங்களே? இந்த மாணவர்களுக்கு ஒழுக்கம் இல்லே. இந்த சமுதாயத்துக்கு ஒழுக்கம் இல்லே. இதுக்கு ஏதாவது வழிபார்க்கலைன்னா இவ்வளவுதான் சீனா அழிஞ்சு போகும். பாரு. எவ்வளவு பரிதாபமான காட்சி."

"என்னது?" அவருடைய மனைவி அவ்வளவாக அக்கறையின்றி ஏனோதானோ என்று கேட்டாள்.

"ஒரு பரிவான மகள்..."மிகவும் மரியாதை கலநத குரலில் மனைவியைப் பார்த்தபடியே சொன்னார். மெயின் ரோட்டுல ரெண்டு பிச்சைக்காரிங்க. ஒருத்தி சின்னப் பொண்ணு. பதினெட்டு, பத்தொன்பது வயசு இருக்கும். இந்த வயசுல பிச்சை எடுக்கிறது சரியில்லேதான். ஆனா என்ன பண்றது? பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை துணிக்கடைக்கு வெளியில பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தாங்க. எல்லாருமே இவ எவ்வளவு... வான்னு பேசுனாங்க. இன்னொரு பிச்சைக்காரி இவளோட பாட்டியா இருக்கணும். எழுபது வயசாவது இருக்கும். இவ தனக்கு என்ன கிடைச்சாலும் அத பாட்டிகிட்ட குடுத்துட்டு, பட்டினி கிடந்தா. இப்படிப்பட்ட பரிவான மகளுக்கு நம்ம ஆளுங்க பிச்சை போடுவாங்கன்னு நெனச்சியா?

மனைவியின் புத்திசாலித்தநத்தைச் சோதிப்பது போல அவளுடைய கண்களையே உற்றுப்பார்த்தார்.

அவள் பதில் சொல்லாமல், இன்னும் சொல்லுங்க என்பது போல அவரையே உறுத்து பார்த்தாள்.