• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-24 13:45:46    
சீன இந்திய நட்புறவுக்கான கட்டுரை போட்டி
எழுதியவர் சின்னவளையம் கு மாரிமுத்து

cri

இந்தியாவில் உள்ள நேயர்களின் கடிதங்கள் சீன வானொலிக்கு தொடர்ந்து வருவதே இந்திய சீன நட்புறவு வளர உதவும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் சீன மக்கள் பேரவையும் இணைந்து எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் எங்களைப் போன்ற நேயர்களையும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளையும் நெசவு தொழிலாளர்களையும் பதிவு பெறாதத் தொழிலாளர்களையும் மிகவும் மகிழ்விக்கிறது.

சீன வானொலியின் தமிழ் பிரிவின் மூலம் வழங்கும் செய்திகள், இந்திய-சீன நட்புறவை வளர்க்கும் என்றும் நம்புகின்றேன். அத்துடன் சீன வானொலி மூலம் வழங்கப்படும் தமிழ் மூலம் சீனம் என்னும் நிகழ்ச்சி தமிழக நேயர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் தமிழ் மூலம் சீனம் எனும் நிகழ்ச்சியை கேட்டும் தமிழ் மூலம் சீனம் எனும் முதல் புத்தகம் இரண்டாவது புத்தகம் படித்தும் இந்திய மற்றும் குறிப்பாக தமிழக நேயர்கள் சீன மொழியை மிகவும் அழகாக கற்றுக் கொள்கிறார்கள். இது மட்டுமல்லாமல் சீன வானொலி மூலம் தமிழ் நாட்டில் உள்ளக் கல்லூரிகளில் அழகுத் தமிழ் படித்து தமிழ் மொழியை பயின்று சீன வானொலியின் அறிவிப்பாளர்களாக பணியாற்றுவது மாபெரும் உதாரணமாக அமைந்துள்ளது. இந்திய சீன நட்புறவிற்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

அத்துடன் இந்தியாவுடன் இணைந்து சீனாவின் மூலிகை மருத்துவத்துறை விஞ்ஞானிகள், எய்ட்ஸ் நோய்க்கான மருத்துகள் கண்டுபிடிப்பதாக சீன வானொலி மூலம் அறிவித்தீர்கள். இது மிக்க மகிழ்ச்சி தரும் செய்தி அல்லவா. அது மட்டுமா இந்திய ராணுவ மந்திரியும் சீன ராணுவ மந்திரியும் ராணுவ ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அறிவித்தீர்கள் அல்லவா. இதுவும் இந்திய சீன நட்புறவிற்கு எடுத்துக் காட்டுஅல்லவா. அதுமட்டுமா இன்னும் ஏராளமான உறவுகள் இருக்கின்றது.

 

சீனாவில் இருந்து வந்து தமிழ் படித்ததோடுநிறுத்தாமல் தங்களின் பெயர்களையும் தமிழ் பிரிவுக்கேற்ப தமிழ் பெயர்களையே சூட்டிக் கொண்டு இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். மேலும் தமிழ் நாட்டில் உள்ள அழகப்பா கல்லூரியில் சீன மொழிக்கென்று தனிபாடப் பிரிவு ஏற்படுத்தி அதில் சீன மொழி பாடமாக நடத்த இருப்பதாகவும் கல்லூரியின் முதல் வர் தனது பேட்டியில் கூறியது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்.

எனவே இந்தியா சீனா நட்புறவு மேலும் மேலும் வளரும் என நம்பலாம்.

மேலும் வளர்வதற்கக சீன வானொலியின் நேயர்களும் உதவிகரமாக இருப்போம் என தெரிவித்து கொள்கின்றேன்.