• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-24 17:27:28    
சிசுவாங்பேனாவில் சுற்றுப்பயணம்

cri

ஒரு சிற்றுண்டி அங்காடியில், உரிமையாளர், புத்தம் புதிய மீனைக் கழுவிச் சுத்தம் செய்து, தாளிப்பு ரசத்தில் எடுத்துவைத்தப் பிறகு, ஒருவகை நறுமண இலையால் கட்டிப்போட்டு, அதைத் தீயிலிட்டு வறுத்தார். இந்த மீன் வறுவல், தனிச்சிறப்பியல்புடைய தேய் இன சிற்றுண்டிகளில் ஒன்றாகும். மீனைச் சுவைத்துக் கொண்டிருந்த திரு லீ மிங், குழந்தைக் காலம் தொட்டு, JING HONG நகரத்தில் வாழ்ந்து வருகின்றார். ஒவ்வொரு தேய் இனப் புத்தாண்டிலும், அவர் இச்சந்தைக்கு வருவார். அவர் கூறியதாவது:

 
நான் இங்கே வாழ்ந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது, சந்தை மேலும் விறுவிறுப்பாக இருக்கிறது. இங்கு வந்துள்ள பயணிகள், வண்ண வண்ண தேசிய இனச் சீரூடைகளை அணிந்து, எமது சிசுவாங்பேன்னாவின் சிறப்பு காட்சிக்கு மெருகூட்டியுள்ளனர். குடும்பத்தினர்களுடன் இணைந்து இந்தச் சந்தைக்குச் சென்று, டிரெகன் படகு போட்டியைப் பார்த்து, தேசிய இனத் தனிச்சிறப்பான சிற்றுண்டிகளைச் சுவைத்து மகிழ்கின்றோம் என்றார் அவர்.
அவர் கூறிய டிரெகன் படகு போட்டி என்பது, இந்தச் சந்தையில் சிறப்பு நிகழ்ச்சியாகும். JING HONG புறநகரத்திலுள்ள மக்கள், கிராம வாரியாக, சில அணிகளை உருவாக்கி, LAN CANG ஆற்றில் டிரெகன் படகு போட்டியில் பங்கேற்றனர். டிரெகன் படகு போட்டிக்குப் பிறகு, அதாவது, தேய் இனப் புத்தாண்டின் 3வது நாள், பாரம்பரிய நீர் தெளிப்பு விழாவாகும்.


தேய் இனத்தின் நீர் தெளிப்பு விழா பற்றி, ஒரு செவிவழிக் கதை உள்ளது. பண்டைக்காலத்தில், ஒரு அரக்கன், சிசுவாங்பேன்னாவைக் கைப்பற்றினார். ஏழு அழகான மங்கையர்களைக் கொள்ளையடித்து, தனக்கு மனைவிகளாக்கினார். அறிவு கூர்மையான, துணிவான இந்த ஏழு மங்கையர்கள், தந்திரத்தைப் பயன்படுத்தி, அரக்கனின் தலையை வெட்டிக் கொன்றனர். ஆனால், அரக்கனின் தலை எங்கே இருந்ததோ, அங்கே தீ பற்றி எரிந்ததாம். இதனால், அனைவரும் நீரைத் தெளித்து, தீயணைத்தனர். பிறகு, தேய் இனப் புத்தாண்டு வரும் போது எல்லாம், மக்கள் ஒருவருக்கு ஒருவர் நீர் தெளித்து, துன்பம் களைந்து, இன்பம் பயக்க வேண்டுவார்கள்.
தேய் இனத்தின் நீர் தெளிப்பு விழா, மாபெரும் கொண்டாட்ட நிகழ்ச்சியின் கடைசி நாளாகும். காலை 9 மணிக்கு முதல்,

JING HONGகின் நகரவாசிகள் வெளியே சென்று, நீர் தெளிப்பு அணிவில் சேர்கின்றனர். சில முக்கிய வீதிகளில், நகராட்சி வாரியங்கள் நீரை வினியோகிக்கும் இடங்களை முன்னதாக உறுதிப்படுத்தியுள்ளன. அன்று, நீரைத் தெளிப்பது, அனைவரும் தொடர்பு கொள்ளும் மொழியாக மாறியுள்ளது. ஒருவர் மீது எவ்வளவு நீர் தெளிக்கப்படுமோ, அவர் அவ்வளவுக்கு இன்பம் பெறுவார் என்றும், புத்தாண்டில் மென்மேலும் சீராக இருப்பார் என்றும் இது, எடுத்துக் காட்டியுள்ளது.
கொண்டாட்ட நிகழ்ச்சியின் கடைசியில், எமது செய்தியாளர், பிரிட்டனின் மென்ச்சேஸ்ட் பல்கலைக்கழகத்தில் சீன மொழி படிக்கும் மாணவர் MATT KELLஐ சந்தித்தார். அவர் JING HONG நகரில் தோண்டராக வேலை செய்து, துவக்க மற்றும் இடைநிலை பள்ளிகளின் மாணவர்களுக்கு ஆங்கில மொழியை கற்பிக்கிறார். தேய் இனப் புத்தாண்டுக்குப் பிறகு, அவர் பிரிட்டனுக்குத் திரும்பி, தமது படிப்பை முடித்துக்கொள்வார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், அவர் மீண்டும் யுன்னானுக்குத் திரும்பி, இங்குள்ள குழந்தைகளின் ஆங்கில படிப்புக்குத் தொடர்ந்து உதவி அளிப்பார். அவர் கூறியதாவது:

 
நான் JING HONG வருவது இதுவே முதல் தடவை. இங்கு மிகவும் அழகானது. பல சுவையான சிற்றுண்டிகள் உள்ளன. மங்கையர்களும் மிகவும் அழகாக இருக்கின்றனர். இரு ஆண்டுகளுக்குப் பின் நான் கண்டிப்பாக திரும்புவேன் என்றார் அவர்.