
சீனாவின் தேசிய பழைமை வாய்ந்த நூல்களின் பாதுகாப்பு மையம் இன்று பெய்சிங்கில் நிறுவப்பட்டது. நாடு தழுவிய, பழைமையான நூல்களின் கணக்கெடுப்பு, அதன் மீட்பு, மீட்புக்கான திறமைசாலி வளர்ப்பு முதலிய பணிகளுக்கு இந்த மையம் பன்முகங்களிலும் தலைமை தாங்கும். கடந்த சில ஆண்டுகளில், சீன அரசு, "சீனாவின் பழைமை வாய்ந்த நூல்களின் சிறப்புச் சேகரிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை" செயல்படுத்தியுள்ளது. படம்பிடித்து அச்சடித்து வெளியிடுவது, டிஜிட்டல் மயப்படுத்தல் முதலிய வழிமுறைகள் மூலம் கடுமையாக பாழடைந்த பழைமை வாய்ந்த நூல்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. புதிதாக நிறுவப்பட்ட இந்த மையம், நாட்டில் உள்ள பழைமையான நூல்களைக் கணக்கெடுத்து, இதன் அடிப்படையில் "நாட்டின் அரிய பழைமை வாய்ந்த நூல்களின் பெயர்ப்பட்டியலை" வெளியிடும்.
|