• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-25 17:09:25    
பல்கலைக்கழகங்களிலுள்ள விளையாட்டு அரங்குகள்

cri

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, பெய்ஜிங்கில் நடைபெறும் போது, 6 பல்கலைக்கழகங்களிலுள்ள விளையாட்டு அரங்குகளில் சில போட்டிகள் நடைபெறும். இவற்றில், பெய்ஜிங் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கு, பெய்ஜிங் தொழிற்பல்கலைக்கழக அரங்கு, சீன வேளாண் பல்கலைக்கழக அரங்கு, பெய்ஜிங் அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழக அரங்கு ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டு வருகிறன. நீண்டகால வரலாறு கொண்ட இந்த பல்கலைக்கழகங்கள், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை எப்படி வரவேற்கும்? இன்று நாம், மேசைப்பந்து போட்டிக்கான விளையாட்டு அரங்கு மற்றும் பூப்பந்து போட்டிக்கான விளையாட்டு அரங்கை சென்று பார்ப்போம்.

2008ம் ஆண்டு, சீன மக்கள் அதிக கவனம் செலுத்தும் மேசைப்பந்து போட்டி, பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். பெய்ஜிங் பல்கலைக்கழக ஒலிம்பிக் மேசைப்பந்து விளையாட்டு அரங்கின் கட்டுமானம், 2005ம் ஆண்டு ஜூலை 19ம் நாள் துவங்கியது. இவ்வரங்கில் 6000 இருக்கைகளும், 2000 தற்காலிக இருக்கைகளும் உண்டு.

பெய்ஜிங் தொழில் பல்கலைக்கழக அரங்கு, பெய்ஜிங்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இவ்வரங்கு பூப்பந்து போட்டி மற்றும் கலை நய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு பொறுப்பேற்கும். பெய்ஜிங் தொழில் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கு, 2005ம் ஆண்டு ஜூன் 30ம் நாள் அமைக்கப்பட துவங்கியது. இதில் 7500 இருக்கைகள் உண்டு.