• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-29 11:22:37    
சீனாவில் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி

cri

கடந்த சில ஆண்டுகளாக, உலக வெப்ப ஏறல் உலகளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து, பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க, சீன அரசு பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைத்து, சீனாவில் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி என்னும் திட்டப்பணியை மேற்கொள்ளப் பாடுபடுகின்றது.


பூமியிலிருந்து வெளியேற்றப்பட்ட நீண்ட வரிசை கதிரியக்கங்களை உட்புகுத்தி, பூமிக்கு மீண்டும் அகச்சிவப்பு கதிரியக்கமாக அனுப்புவது என்பது பசுங்கூட வாயுக்களின் விளைவு ஆகும். கரியமில வாயு, நிலக்கரி வாயுக்கலவை உள்ளிட்ட பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் இடைவிடாமல் அதிகரிப்பதினால், முழு உலகில் காலநிலை வெப்பமாகி வருகின்றது. சீனாவில், இதனால் ஏற்பட்ட வெப்ப குளிர்கால நிலைமை தொடர்கின்றது. கடந்த பிப்ரவரி திங்கள் 5ந் நாள், பெய்ஜிங் மாநகரில் வானிலை 16 திகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இது கடந்த 167 ஆண்டுகளில் மிக உயர்வான பதிவாகும். வெப்ப குளிர்காலத்தில், வயலில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும் என்றும், வறட்சி நிலைமையும் தீவிரமாகிவிடும் என்றும் சீனப் பொறியியல் கழகத்தின் உறுப்பினரும், சீன தேசிய வாநிலை ஆணையத்தின் தலைவருமான Qin Da he கூறினார். பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம், பசுங்கூட விளைவு ஆகியவற்றால் மேலும் அதிகமான பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது,

ஆய்வின் படி, உலக வெப்ப ஏறல் தீவிர வானிலைகளை ஏற்படுத்தக் கூடும். உயர் வெப்பம், வறட்சி, சூறாவளி முதலிய இயற்கை சீற்றங்களின் எண்ணிக்கையையும் விளைவுகளையும் இது தீவிரமாக்கும். கடந்த ஆண்டு, சீனாவில் சில முறை புயல்காற்று ஏற்பட்டன. மக்களுக்கு உயிர் மற்றும் உடைமை பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு உலகில் வானிலையின் மாற்றத்துடன் தொடர்புடையது என்றார் அவர்.
தென் மற்றும் வட துருவப் பிரதேசங்களில் பனிக் கட்டி உருகுவதும் பசுங்கூட விளைவு ஏற்படுத்தும் கடுமையான பாதிப்புகளில் இடம்பெறுகின்றது. பனிக்கட்டி உருகிய பின், கடல் மட்டம் உயரும். கடலோர தாழ் நிலங்கள் கடல் நீரினால் மூழ்கடிக்கப்படும். கப்பல் போக்குவரத்து, நீர் வாழ் வன வளர்ப்பு முதலிய தொழில்கள் பாதிக்கப்படும்.


ஆகையால், கடந்த சில ஆண்டுகளாக, பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க சீனா உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 2002ம் ஆண்டு, கியோட்டோ ஒப்பந்தத்தை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கிணங்க, வெளிநாடுகளிலிருந்து நிதியையும் முன்னேறிய தொழில் நுட்பத்தையும் சீனா உட்புகுத்தி, சீனாவில் தூய்மையான எறியாற்றல் பயன்பாட்டை வளர்க்கின்றது. இவ்வாண்டு ஜனவரி திங்கள் வரை, மின்னாற்றல், நிலக்கரி, வேதியியல் தொழில் உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய சுமார் 300 தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி திட்டப்பணிகளை சீனா அங்கீகரித்துள்ளது.
இவற்றில் மின்னாற்றல் துறையில், எரியாற்றலின் பயனை உயர்த்துவது, சுத்தமான எரியாற்றலை பயன்படுத்துவது ஆகியவை மூலம், பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் குறைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, வடக்கு சீனாவின் உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தில் ஒரு இலட்சம் கிலோவாட் அளவுடைய காற்று மின் திட்டப்பணிகட்டியமைக்கப்பட்ட பின், ஆண்டுக்கு 2.5 இலட்சம் டன் கரியமில வாயு எனும் பசுங்கூட வாயுவின் வெளியேற்றத்தைத் தவிர்க்கலாம்.


நிலக்கரி துறையில், நிலக்கரி உற்பத்தியில் வெளியேறும் உள்ளடங்கிய நிலக்கரி வாயுக்கலவையைப் பயன்படுத்தி, மின்னாக்கி மற்றும் வெப்பத்தை உற்பத்தி செய்வது உலகில் பொதுவாகப் பயன்படுத்தும் தொழி்ல் நுட்பமாகும். சீனாவின் நடு பகுதியில் அமைந்துள்ள ஆன் குய் மாநிலத்தில் சில நிலக்கரி சுரங்கங்களில், நிலக்கரி வாயுக்கலவையை மீண்டும் பயன்படுத்தும் திட்டப்பணி கட்டியமைக்கப்படுகின்றது. கட்டியமைக்கப்பட்டப் பின், ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றத்தை தவிர்க்கலாம்.