• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-29 11:32:00    
மகாமணி, ஆலயத்தை வங்தடைந்த கனத

cri

யான் இளவரசர் சூ தி, பேரரசராக ஆனதும், தன்னை ஆட்சியில் இருந்து கவிழ்த்து விடுவார்களோ என்று அஞ்சினான். எல்லாக் கலகங்களையும் ஒடுக்குவதற்காக, வருமுன் காப்பது போல மக்களிடையே இருந்த கத்தி, வேல், ஈட்டி போன்ற எல்லா ஆயுதங்களையும் திரட்டி உருக்கி, ஒரு பெரிய மணியைத் தயாரிக்கச் சொன்னான். அந்த மணியோசை கேட்டதும் கலகம் செய்ய எவரும் துணியமாட்டார்கள் என நம்பினான். பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த மணி அலட்சியப்படுத்தப்பட்டு, Xizhimen வாசலுக்கு முன்பாக உள்ள வாய்க்காலில் மணலில் புதைந்து விட்டது. நூற்றாண்டு காலம் புதைந்தே கிடந்தது. அதை வெளியே எடுக்க வேண்டும் என்று வெருக்கும் தோன்றவில்லை.


ஒரு நாள் ஒரு கிழட்டு மீனவரின் பார்வையில் மணி தட்டுப்பட்டதும் பேச்சு பரவி, சிங் பேரரசரின் செவியை எட்டியது. உடனே அதை எடுத்து, விழிப்புணர்வுக் கோயிலில் உள்ள கோபுரத்தில் தொங்க விடும் படி அமைச்சருக்கு உத்தரவிட்டார். கால்வாயில் இருந்து மணியை வெளியே எடுப்பது கடினமாக இருக்கவில்லை. ஆனால், இவ்வளவு பெரிய மணியை ஆறு மைல்களுக்கு அப்பால் உள்ள கோயிலுக்கு எவ்வாறு கொண்டு செல்வது?
கோடை காலத்தில் தோண்டி எடுக்கப்பட்ட மணியை, இலையுதிர்காலத்திலும் நகர்த்த முடியவில்லை. மழைக்காலம் வந்து தூறல் விழுந்ததும் தொழிலாளர்கள் கவலைப்பட்டனர். கையில் இருந்த பணத்தை எல்லாம் திரட்டி மது வாங்கி, ஒரு பெரிய கல்பலகையை மேஜையாகப் பாவித்து குடிக்கத் தொடங்கினர். தொழிலாளர்களின் தலைவன் தனது கோப்பையை உயர்த்திப் பிடித்தபடி!

 மற்றவர்களையும் குடிக்கச் சொன்னான். குடிக்கக் குடிக்க அவனைக் கவலை குடித்தது. ஆகவே தனது கோப்பையை கற்பலகையின் எதிர் முனையில் இருந்தவனிடம் கொடுத்து குடிக்கச் சொன்னான். கோப்பை கைமாறிச் சென்ற போது அதை வாங்கியவன் கைதவறிப் போட்டுவிடவே மது சிந்தியது. எல்லோரும் வருத்தப்பட்ட போது, "கோப்பை மிகவும் வழு வழுப்பு. கற்பலகை மீது தள்ளி விட்டால் சுலபமாக எதிர் முனைக்கு சறுக்கிக் கொண்டு போதுமே" என்று ஒருவன் கூறினான். அவனை எல்லோரும் ஊமையன் என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் எப்போதாவது தான் அவன் பேசுவதற்கு வாய்திறப்பான். அவள் சொன்னதைக் கேட்டதும், "ஊமையன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை" என்று உற்சாகமாக ஒருவன் கத்தினான். அவன் தனது கருத்தை விளக்கினான். "இந்த மதுக் கோப்பையை மணியா நினைச்சுக்கோங்க. இங்கிருந்து கோயிலுக்கு ஒரு வாய்க்கால் வெட்டி தண்ணீரை நிரப்பினால்,

குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்து விடும். அந்த பனிக்கட்டிப் பரப்பு மீது மணியைத் தன்னீர் கொண்டு போய் விடலாம். நம்ம பிரச்சினை தீர்ந்தது"
அதே போல, ஒரு சிறு கால்வாய் வெட்டப்பட்டது. தண்ணீர் உறைந்ததும் அதன் மீது மணியைத் தள்ளிக் கொண்டே போய் கோயிலில் சேர்த்தனர்.