• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-29 15:34:52    
மன்ற கூட்டம் பற்றி விழுப்புரம்

cri

எஸ்.பாண்டியராஜன் அறிவித்த தகவல் இதோ.
விழுப்புரம் மாவட்ட சீன வானொலி நேயர் மன்றக் கூட்டம் ஏப்ரல் திங்கள் 22 ஆம் நாள் காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தின் சுற்றுலா நகரான செஞ்சிக் கோட்டையில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழாவாக நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 
1. வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அவர்களின் தாயார் காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
2. இன்றைய கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்குகொண்ட திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன், பாண்டிச்சேரி ஜி.ராஜகோபால், என்.பாலக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
3. மன்றத்தின் கோரிக்கையை ஏற்று இன்றைய கூட்டத்தில் நேயர்களுக்கு விநியோகிக்கும் வகையில் 200 இலவசக்
கடித உறைகளை அனுப்பி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
4. இன்றைய கூட்டத்தில் பின்வரும் நேயர் மன்றங்கள் துவக்கி வைக்கப்பட்டன.
1. வளவனூர் சீன வானொலி நேயர் மன்றம்.
2. கண்டமங்கலம் சீன வானொலி நேயர் மன்றம்.
3. விழுப்புரம் நகர சீன வானொலி நேயர் மன்றம்.
4. விழுப்புரம் முத்தமிழ் சீன வானொலி நேயர்
மன்றம்.
5. விழுப்புரம் மாவட்ட மகளிர் சீன வானொலி நேயர் மன்றம்.
6. செஞ்சிக்கோட்டை சீன வானொலி நேயர் மன்றம்.
............. வளவனூர் முத்து சிவக்குமரன் தெரிவித்த கருத்து
சீனப் பண்பாடு பகுதியில் சீன நாடகத் துறையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி பல அரிய தகவல்கள் இடம் பெற்றுட்டுள்ளன. இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கும் எந்த நாடும், கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை பேணிக் காப்பதில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகவே விளங்கும். அந்த வகையில் சீனா பழம்பெருமை வாய்ந்த, சிறப்பு மிக்க பண்புகளை கொண்டிருப்பதால், அவை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாகவே உள்ளது.

 
..........மதுரை-20 என் இராமசாமி
சீனாவின் பல்வேறு இடக்களில் உள்ள சந்தைகளில் நுகர்வுப் பொருட்களின் விநியோகம் போதிய அளவில் உள்ளது என்று சீன தேசிய புள்ளி விவர பணியகத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்என்பதை அறிந்து கொண்டேன். சீன அரசு வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட்டு தனது பொருளாதரத்தில் 11.1 சதவிதம் வளர்ச்சி கண்டு உள்ளது என்பதை கோடிட்டு காட்டுகிறது. உலக அரங்கில் மற்ற நாடுகள் சீனாவின் அதிரடி பொருளாதர வளர்ச்சியை கண்டு அதிர்ச்சி அடைந்து ள்ளது.
............ பாண்டிச்சேரி என்.பாலகுமாரின் கருத்து இதோ.
செய்தித்தொக்குபில் இருகரை பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய 3வது கருத்தரங்கு தொடர்பான விரிவான தகவல்கள் இடம்பிடித்து இருந்தது. கடந்த இரண்டு கருத்தரங்கில் பலதரப்பட்ட பல்வகையான ஒத்துழைப்பு பற்றி விரிவாக விவாதித்தாலும் இந்த 3வது கருத்தரங்கில் பண்பாட்டு பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை அறிந்தேன். இதே போல் அடுத்து நடைபெறும் ஒவ்வொரு கருத்தரங்கிலும் ஒரு முக்கிய பரிமாற்றத்தை விவாதிப்பார்கள் என நம்புகிறேன்.

 
........... மதுரை-20 ஆர் அமுதாராணி தீப தொடரோட்டம் பற்றி தெரிவித்த கருத்து.
பெய்ஜ்ஜிக் ஒலிம்பிக் தீப தொடரோட்டம் பெய்யிங்கில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பெய்சிங் ஒலம்பிக் தீப தொடரோட்ட நெறி பற்றிய அறிவிப்பு விழா நடைப்பெற்றது. இன்னும் ஓரண்டுக்கும் சற்றே கூடுதலான நிலையில் 2008 ஒலம்பிக் விளையாட்டு போட்டிகள் சீனாவில் திறம்பட நடைபெற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மேற்பார்வையாளர்களும் ஒலிம்பிக் திடலை உருவாக்க பாடுப்பட்டு வருகிறர்கள் என்பது குறிபிடதக்கது.
......... மதுரை-20 டாக்டர் ஆர் ராஜ்குமார் தெரிவித்த கருத்தை பார்க்கின்றோம்.
சீனாவின் மத்திய பகுதிக்கான 2வது முதலீடு மற்றும் வர்த்தக பொருட்காட்சி செச்சியா நகரில் துவங்கியது. மத்திய பகுதியின் தனிச் சிறப்புகளை வெளிப்படுத்தி, இப்பகுதிக்கான வர்த்தக முதலீட்டை மேம்படுத்துவது என்பது இதன் நோக்கமாகும். சீன அரசு அந்நிய முதலீட்டை ஈர்க்க இது போன்ற வர்த்தக பொருட்காட்சிகளை நடத்தி பாடுப்பட்டு வருகிற்து என்பதை எடுத்து காட்டுகிறது.