• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-30 08:53:16    
சோப்பு 5

cri

"ப்பூ. எவனும் போடலே." அவரே பதில் சொன்னார். "ரொம்ப நேரம் அவங்களையே பாத்துக்கிட்டு நின்னேன். ஒரே ஒரு ஆள் மட்டும்தான ஒரு செப்புக்காசு போட்டாரு. மத்தவங்க சுற்றி நின்னு வேடிக்கை பார்த்தாங்க. அதுல ஒருத்தன். சரக்கு அழுக்கா இருக்கேன்னு பார்க்காதே, ரெண்டு சோப்பு வாங்குனா இவளுக்கு ஒண்ணு கொடுத்து நல்லாத் தேய்ச்சு குளிக்கச் சொல்லு. சரக்கு பளிச்சுனு ஆயிரும். அப்படின்னு சொல்றான். பாரு, எந்த மாதிரி பேசுறானு!"

மனைவி தலையைத் தாழ்த்திக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து தற்செயலாக கேட்பது போல கேட்டாள். "நீங்க அவளுக்கு ஏதாவது பணம் குடுத்திங்களா?"

"யாரு? நானா? இல்லே. ஒண்ணு ரெண்டு துட்டு குடுக்கறதுக்கு அவ ஒண்ணும் சாதாரண பிச்சக்காரி ில்லே தெரியுமா?"

"ம்ம்..." அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பே மெதுவாக எழுந்து சமையலறையை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள்.

ஸு மின்னும் எழுந்து முற்றத்திற்குச் சென்றார். உள்ளே இருப்பதைவிட வெளியே மனம் லேசாக இருந்தது. ஸுவே செங் குத்துச் சண்டை பழகத் தொடங்கி விட்டான்.

அவனுக்கு இதுவும் ஒரு வீட்டுப்பாடம். இரவுமில்லாத, பகலும் இல்லாத அந்தி வேளையில் அவன் இந்தப் பயிற்சியைச் செய்கிறான். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகிவிட்டன. சரி செய் என்பது போல அவனைப் பார்த்து தலையசைத்து விட்டு, கைகளைப் பின்னால் கட்டியபடி முற்றத்திலேயே முன்னும் பின்னமாக நடைபயிலத் தொடங்கினார். முற்றத்தில் பூந்தொட்டியில் வைக்கப்பட்டிருந்த வாடாமல்லியின் இலைகள் இருட்டில் அடையாளம் தெரியாமல் போயின. கிழிந்து போன பருத்தி ஆடை போலத் தெரிந்த வென் மேகங்களுக்கு இடையில் நட்சத்திரங்கள் மின்னின. இரவு மெல்லமெல்ல வந்துவிட்டது.

மனதில் தோன்றிய எரிச்சலை ஸு மின்னால் அடக்க முடியவில்லை. சுற்றியுள்ள மோசமான மாணவர்கள் மீதும் தந்திரக்கார இந்தச் சமுதாயத்தின் மீதும் போர் தொடுக்க நினைத்தார்.

மெல்ல மெல்ல அவருடைய துணிச்சல் வேகம் பெற்றது. அந்த வேகம் நடையிலும் பிரதிபலித்து, தட்தட் என்று கேன்வாஸ் காலணிகலால் பலிமாக ஓசை எழுப்பியபடியே பெரிய எட்டுகளாக நடந்தார். இதனால் கூண்டில் அடைபட்டிருந்த கோழியும், கோழிக் குஞ்சுகளும் கூட விழித்துக் கொண்டு பயந்து போய் கெக்கரித்தன.

வீட்டுக் கூடத்தில் விளக்கு எரிந்தது. இரவு உணவு தயாராகிவிட்டது என்பதற்கு அடையாளம். நடுவில் இருந்த மேஜைக்கு முன்னர் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்தனர். மேஜையின் கடைசி ஓரத்தில் விளக்கு. இந்தக் கடைசியில் ஸு மின் உட்கார்ந்திருந்தார். கொழுகொழுவென்ற வட்டமான முகம். ஸுவே செங் முகம் போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் அங்கொன்றும் இங்கொன்று மாக முளைத்திருந்த இரண்டு மூன்று மீசைமயிர் சூப்பில் இருந்து எழுந்த ஆவிக்கு நடுவில் அவரது முகம் கோவிலில் இருக்கும் செல்வக் கடவுளின் முகம் போல் இருந்தது.

இடது புறம் அவரது மனைவியும் ஒருமகள். வலது புறம் மகன் ஸுவே செங்கும், இன்னொரு மகள். கிண்ணங்களின் மீது சரமாரியாக சாப்ஸ்டிக்குகள் மோதின. யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனாலும் உணவு மேஜையில் உயிர்களை கட்டியது.