• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-01 13:02:19    
உலக மேசைப்பந்து சாம்பியன்பட்ட போட்டி

cri

49வது உலக மேசைப்பந்து சாம்பியன்பட்ட போட்டி 27ம் நாள் குரோவேஷியாத் தலைநகர் சாக்ரேபில் முடிவடைந்தது. சீன வீரர்களும்-வீராங்கனைகளும் போட்டியின் அனைத்து ஆட்டங்களிலும் தங்கப்பதக்கங்களையும் வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றனர்.


சீனா 6வது முறையாக அனைத்து தங்கப்பதக்கங்களையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 5 ஆட்டங்களின் தங்கப்பதக்கங்கள் தவிர வெள்ளி பதக்கங்களையும் பெறுவது, இது 3வது முறையாகும்.


ஆடவர் ஒற்றையர் போட்டியின் இறுதி ஆட்டத்தில், சீன வீரர் வாங்லிசின் சக அணி வீரர் மாலிங்கை 4-3 என்ற ஆட்ட கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை பெற்றார். மாலின் வெள்ளி பதக்கம் பெற்றார். சீன வீரர் வாங்கோவும், தென் கொரிய வீரர் லியுசான்மிங்கும் 3வது இடம் பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் போட்டியின் இறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை கோயொ, சக அணி வீராங்கனை லிசியோசியாவை 4-3 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்து, தங்கப்பதக்கத்தைப் பெற்றார்.


ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய போட்டிகளில், சீன இணைகளான, மாலின் சேன்சி, வாங்னைன் சாங்யினிங், வாங்லிசின் கோயு, ஆகியோர் தத்தமது சக அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தோற்கடித்து, தங்கப்பதக்கங்களை பெற்றனர்.