• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-03 08:24:10    
சீன மகளிர் மற்றும் குழந்தைகளின் உரிமை நலனை பாதுகாப்பு

cri

கடந்த சில ஆண்டுகளாக, சீன அரசாங்கம், பல தரப்பு சக்திகளை திரட்டி, மகளிர் மற்றும் குழந்தைகளின் வாழ்வு, பாதுகாப்பு வளர்ச்சி தொடர்பான சில பிரச்சினைகளை தீர்த்துள்ளது. இத்துறையில் பெரும் சாதனைகளை பெற்றுள்ளது. பயனுள்ள உண்மையான நடவடிக்கைகளை சீன அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு மகளிர் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி இலக்கை முன்னேற்றும். சீன அரசவையின் மகளிர் மற்றும் குழந்தைகள் பணி கமிட்டியின் பொறுப்பாளர் ஒருவர் மே திங்கள் 15ம் நாள் பெய்சிங்கில் இவ்வாறு கூறினார்.


சீன மகளிர் மற்றும் குழந்தைகளின் தொடரவல்ல வளர்ச்சி இலக்கை முன்னேற்றும் வகையில், 2001ம் ஆண்டு மே திங்களில், சீன மகளிர் வளர்ச்சி பணித்திட்டம் மற்றும் சீன குழந்தைகளின் வளர்ச்சி பணித்திட்டம் ஆகியவற்றை சீன அரசவை வெளியிட்டது. இந்த இரு திட்டங்களின் நடைமுறையாக காலம், பத்து ஆண்டுகளாகும். சமூகத்தின் பல்வேறு துறைகளின் முயற்சியுடன், இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்த துங்கிய பின், மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்புடைய பணி பெரும் சாதனைகளை பெற்றுள்ளது என்று சீன அரசவையின் மகளிர் மற்றும் குழந்தைகள் பணிக் கமிட்டியின் துணை இயக்குநர் வாங் ச்சின் யீ அம்மையார் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது 
கடந்த சில ஆண்டுகளாக, சீன பெண்கள் வேலையில் ஈடுபடும் விகிதம் உயர்ந்து உருகிறது. தற்போது, வேலை வாய்ப்பு பெறுகின்ற பெண்மணிகள், முழு சமூகத்தில் வேலை வாய்ப்பு பெறுவோரில் 45 விழுக்காடு வகிக்கின்றனர். அதே வேளையில், கிராமங்களின் வறிய பெண்மணிகளின் எண்ணிக்கை, 40 லட்சம் குறைந்துள்ளது. அரசியல் நிர்வாக துறையில் ஈடுபடுகின்ற பெண்கள் அதிகரித்து வருகிறனர். மகளிர் மற்றும் குழந்தைகள் கல்வி பெறும் நிலை மேலும் உயர்ந்து வருகின்றது என்று அவர் கூறினார்.

தவிரவும், சீன மகளிர் மற்றும் குழந்தைகளின் உடல் நல நிலைமை மேலும் மேம்படு்த்தப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டு முதல், சீனாவின் 20க்கு அதிகமான மாநிலங்களில், கர்ப்பவதிகள் பிரசவிக்கும் பெண்களின் உயிரிழப்பு விகிதம் மற்றும் பிறந்த குழந்தையின் ஏற்பு வலி நோயைக் குறைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 30 கோடி மக்கள், இந்த திட்டத்திலிருந்து நன்மை பெறுகின்றன. சீன அரசாங்கம் இத்திட்டத்திற்கு பெருமளவில் நிதி ஒதுக்கியுள்ளது. அடிமட்ட மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதிலும் வறுமை நீங்கும் பணியிலும் இந்தத் தொகை பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டப நடைமுறைக்கு வந்த கடந்த சில ஆண்டுகளில், , கர்ப்பவதிகள், பிரசவிக்கும் பெண்கள் மற்றும் சிசுக்களின் உயிரிழப்பு பெருமளவில் குறைந்துள்ளது. மகளிர்ன் சராசரி ஆயுள் காலம், 74 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு தொடர்புடைய வாரியங்கள் அளித்த சட்ட உதவி சேவை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழுந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பயன் தரும் முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.