• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-31 08:17:39    
நேயர் மன்ற கள ஆய்வு தொடர்பான விளக்கம்

cri
வெளிநாடுகளிலுள்ள சீன வானொலி நேயர் மன்றம் பற்றிய கள ஆய்வு தொடர்பான விளக்கம்

நேயர்களே. இந்த கள ஆய்வு படிவம் மே திங்கள் நடுப் பகுதியில் நேயர் மன்ற பொறுப்பாளர்களுக்கு வந்து சேர்ந்தன. பொறுப்பாளர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக படிவத்தில் தகவல்களை நிரப்புவதில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் சில பகுதிகளில் எபபடி நிரப்புவதென சில நேயர் மன்றப் பொறுப்பாளர்கள் தொலை பேசி அல்லது மின்னஞ்சல் மூலம் கேட்கின்றனர். இது குறித்து அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் மணமேடு எம் தேவராஜாவைத் தேர்வு செய்து தமிழ்ப் பிரிவின் தலைவர் தி கலையரசியுடன் ஒத்துழைத்து வினா விடை வடிவத்தில் நடத்திய உரையாடல் நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மே திங்கள் 30ம் நாள் இடம் பெறும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் தொகுக்கப்பட்டு கட்டுரை வடிவத்தில் இணையத்தில் வெளியிடப்படும்.

உரையாடலின் அம்சங்கள் தொகுக்கப்பட்டு உரையாடல் வடிவத்தில் கீழே காணப்படுகின்றது.

..........தேவராஜா

இந்தக் கள ஆய்வு படிவத்தின் முதல் பகுதி பொதுவாக தெளிவாக புரிந்து கொள்ளப்படுகின்றது. இரண்டாவது பகுதியில் 17வது வினா முதல் 26வது வினா வரையான 10 வினாக்கள் இருக்கின்றன. ஏற்கனவே மன்ற உறுப்பினர்கள் சீனா பற்றி தெரிந்து கொண்டுள்ளனர்கள். வானொலியின் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி மூலம் சீன மொழியை நேயர்கள் கற்றுக் கொண்டு வருகின்றனர். வானொலி மட்டுமல்ல தொலைக் காட்சி மூலமும் சீனா பற்றிய அறிவை அறிந்து கொண்டுள்ளார்கள்.

கலையரசி............தேவராஜா சொன்னது மிகச் சரியானது. ஆகவே இந்த பகுதியில் பதிலளிக்கும் போகு பொதுவாக "ஏ" பகுதியை தேர்வு செய்து குறியிடுங்கள் என்று முன்மொழிகிறோம்.

அடுத்து இன்னும் இந்த பகுதியில் 19வது வினாவில் இந்தியாவில் தொலைக் காட்சி, வானொலி, பத்திரிகை, இணைய தளம் ஆகிய வழி முறைகளின் மூலம் சீனா பற்றிய தகவல் கிடைக்குமா என்று கேட்கப்பட்டுள்ளது.

எம் தேவராஜா.........இது பற்றி சொல்ல வேண்டுமானில் இந்தியாவின் நகரங்களில் தொலை காட்சி வானொலி செய்தியேடுகள் இணைய தளம் ஆகியவற்றின் மூலம் சீனா பற்றிய தகவல் பெற முடியும். ஆனால் கிராமப்புறங்களில் அவ்வளவு வசதியான சூழ்நிலை இல்லை. எப்படி செய்யலாம்.

கலை.........சீன அரசும் இந்திய அரசும் ஒத்துழைப்பு மூலம் செயற்கைக் கோள் ஊடாக ஆங்கில மொழியிலுள்ள தொலைக்காட்சி ஒளிபரப்புகளை அதிகரிக்க வேண்டும்.

தேவராஜா........ சீனா பற்றி தொலைக் காட்சி மூலம் அறிமுகப்படுத்தும் வகையில் இரு நாட்டு அரசுகள் ஒத்துழைப்பு மூலம் தொலைக் காட்சி ஒளிபரப்புகளை அதிகரிப்பது நல்ல யோசனைதான். இந்த வழிமுறையில் இரு நாட்டு மக்கள் மற்ற தரப்பின் வாழ்க்கை நிலைமையை மேலும் கூடுதலாக அறிந்து கொள்ளலாமே.

கலை......இது நல்ல யோசனைதான்.

தேவராஜா........மேலுமந் கன்பியூசியஸ் வகுப்பு இந்தியாவில் புதுதில்லி போன்ற முக்கிய மாநகரங்களில் ஏதோ நிலவுகின்றது. எங்கள் தமிழகத்தில் இருக்கின்றதா என்பது தெரியவில்லை. ஆகவே மூன்றாவது பகுதியில் எப்படி நிரப்ப முடியும்.

கலை........ஏற்கனவே நேயர்கள் முக்கியமாக வானொலி மூலம் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் சீன மொழியை கற்று வருகின்றனர். இது நடைமுறைக்கு ஏற்ற வழி முறையாகும். தொடர்ந்து இதை பின்பற்றலாம். இது தவிர நாம் நேயர் மன்றத்தின் ஒத்துழைப்புடன் கன்பியூசியஸ் வகுப்பு நடத்தலாம். நேயர்கள் வானொலி மூலம் மட்டுமல்ல வகுப்புகளின் மூலமும் நேரடியாக சீன மொழியை கற்றுக் கொள்ளலாம்.

தேவராஜா.......இந்த முறை தொலை பேசி மூலம் நேரடியாக கள ஆய்வு படிவத்தை கண்ட வண்ணம் உரையாடும் வழிமுறை சிறப்பானது. எதிர்காலத்தில் இதை பின்பற்ற விரும்புகின்றேன்.

கலை.......தொலை பேசி மூலம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது நவீன முன்னேறிய வழிமுறையாகும். நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.