• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-31 22:22:36    
உலகில் தேசிய இனங்கள் எத்தனை?

cri

சீனாவில் மிகப்பெரிய வானியல் தொலைநோக்கி

விண்வெளியிலுள்ள கோள்கள்、நட்சத்திரங்களை ஆய்வு செய்ய உதவும் சீனாவின் மிகப் பெரிய தொலை நோக்கி, தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில் செயல்படத் துவங்கியுள்ளது.

8 மீட்டர் உயரமும் 2.4 மீட்டர் குறுக்களவும் 40 டன் எடையும் கொண்ட இந்த வானியல் தொலைநோக்கி, கிழக்காசியாவின் மிகப் பெரிய தொலைநோக்கியுமாகும்.

லிஜியாங் நகரில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள லிஜாங் வானியல் ஆய்வு மையத்தில் இந்தத் தொலைநோக்கி நிறுவபபட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

உலகில் தேசிய இனங்கள் எத்தனை?

உலகில், 2000க்கு அதிகமான தேசிய இனங்கள் உள்ளன. இவற்றில், சீனாவின் உறான் இனத்தவர், இந்துஸ்தானியர்、 அமெரிக்கர், வங்காளி, ரஷியர், ஜபானியர், பிரேசிலியர் ஆகிய 7 தேசிய இன மக்களின் எண்ணிக்கை, 100 கோடிக்கு மேற்பட்டது.

60 தேசிய இனங்களின் மக்கள் தொனக, 100 கோடிக்கு உட்பட்டது. 10 லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் எண்ணிக்கை 202 ஆகும். 92 தேசிய இனங்கள், ஒரு லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை உடையவை.

ஆசியாவில், மொத்த தேசிய இனங்களின் எண்ணிக்கை, 1000க்கு மேலாகும். இது உலகத் தேசிய இனங்களின் மொத்த எண்ணிக்கையில் அரைவாசியாகும்.

ஐரோப்பாவில் சுமார் 170 தேசிய இனங்கள் மட்டும் உண்டு. உலகில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவானது.

உலகளவில், மிகப் பெரும்பான்மையான நாடுகளில் பல தேசிய இனங்கள் வாழ்கின்றன. நைஜீரிய நாட்டில் மொத்தம் 256 தேசிய இனங்கள் உள்ளன. அடுத்த படியாக, இந்தோனேசியாவில் 150 தேசிய இனங்கள் இருக்கின்றன.

சீனா、இந்தியா、 பிலிப்பைன்ஸி ஆகியன, 50 க்கு அதிகமான தேசிய இனங்களைக் கொண்டு விளங்குகின்றன. கொரியா、ஜப்பான்、 செளதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகளில் தனியொரு தேசிய இனம் மட்டும் உள்ளது.