• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-31 11:05:14    
சியாங்சூ மாநிலத்தின் பண்டைய வட்டம்

cri

சீனாவின் சியாங்சூ மாநிலம், புகழ்பெற்ற பண்டைய வட்டங்கள் ஒன்று திரண்ட பிரதேசமாகும். இதில், LU ZHI என்னும் பண்டைய வட்டம், 2500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட காரணத்தால், ஆற்று வளம் மிகுந்த சீன நீர் கிராமப்புறங்களில், முதலாவது வட்டம் என்று போற்றப்பட்டது.

 
சியாங்சூ மாநிலத்தின் சூ சோ நகரத்தைச் சேர்ந்த LU ZHI பண்டைய வட்டம், ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. இவ்வட்டத்தின் மேற்கு வாயிலில், ஒரு உயரமான கல் வில்வளைவு உள்ளது. பிறகு, பயணியர்கள், LU ZHI என்னும் பாலத்தைக் கடந்து சென்றால், இவ்வட்டத்தின் சின்னத்தைப் பார்க்கலாம். அதாவது, தனிச்சிறப்பான வடிவுடைய தனிக் கொம்பு கொண்ட மிருகத்தின் சின்னம். அதன் பெயர் LU DUAN. இதை, பாதுகாப்பை வழங்கும் மிருகமாக உள்ளூர் மக்கள் கருதினர். வழிகாட்டி WANG YAN அம்மையார் அறிமுகப்படுத்தியதாவது:
இப்பண்டைய வட்டம், சீனாவின் CHUN QIU காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. 2500 ஆண்டுகால வரலாறுடையது. இவ்வட்டத்தின் தெற்கு பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கிட்டிய தொல்பொருட்களின் படி, 5500 ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். தற்போதைய பண்டைய வட்டம், ஒரு ஆறும் இரு பாதைகளும் என்ற தனிச்சிறப்பியல்பு உடையது. ஆற்றுக் கரைகளிலுள்ள வீடுகள், நூறு ஆண்டுகளுக்குக் கூடுதலான வரலாறுடையவை. இதன் முற்பகுதி, அங்காடியாகவும், பிற்பகுதி, இவ்வட்டத்தின் குடும்பத்தினர் வசிக்கும் இடமாகவும் இருக்கிறது என்றார் அவர்.
LU ZHI என்னும் இந்தப் பண்டைய வட்டத்தில் 9 முக்கிய சாலைகள் உள்ளன.

 சாலைகளிலுள்ள கட்டிடங்களில், பெரும்பாலானவை, சீனாவின் மிங் அல்லது சிங் வம்ச காலத்தில் கட்டியமைக்கப்பட்டவை. இந்த சாலைகள், கற்களால் போடப்பட்டவை. சாலையோரத்தில் கடைகள் நிறைய உள்ளன. பயணிகள் மிகவும் அதிகம். அதிகமான ஆறுகளும், அதிகமான பாலங்களும், இப்பண்டைய வட்டத்தின் தனிச்சிறப்பியல்பாகும். LU ZHIயிலுள்ள நீர் பாதை, சுமார் 5 அல்லது 6 கிலோமீட்டர் நீளமாகும். XIA MEN நகரத்திலிருந்து வந்த பயணி LIU LI MEI அம்மையார் கூறியதாவது:
பண்டைய வட்டத்தின் பண்பாட்டு உள்ளடக்கம் மிகவும் ஆழமானது. ஆற்று வளம் செழிக்கும் கிராமப்புறத்தின் தனிச்சிறப்பியல்பு கொண்டுள்ளது. பயணியர் இங்கு வந்து, படகு மூலம், சுற்றுப்பயணம் செய்யலாம் என்றார் அவர்.
பால நகரம் என்று அழைக்கப்பட்ட LU ZHIயில், பல்வேறு வம்சங்களின் 72 கல் பாலங்கள் உள்ளன. பல வில்வளைவுகளைக் கொண்ட பெரிய கல் பாலம், தனி வில்வளைவுடைய சிறிய கல் பாலம், அலங்காரத்தன்மை வாய்ந்த இரட்டை பாலங்கள், சகோதரி பாலம் முதலியவை இதில் இடம்பெறுகின்றன. இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது, பண்டைக்கால பாலங்கள் பற்றிய அருங்காட்சியகத்தைப் பார்ப்பதற்குச் சமம்.
பண்டைய மரங்கள், இவ்வட்டத்தின் மற்றொரு தனிச்சிறப்பியல்பாகும். தற்போது, LU ZHI வட்டத்தில், பண்டைய gingkgo மரங்கள் உள்ளன. இதில் மிகவும் பெரிய மரம், 1500 ஆண்டு பழமை வாய்ந்தது. இம்மரம், 50 மீட்டர் உயரமானது. ஆடவர் மூன்று பேர் முயன்றாலும் இம்மரத்தைக் கை ஒன்றிணைத்துக் கட்டிப்பிடிக்க முடியாது.

 
LU ZHI வட்டத்தின் மேற்கு சாலையில், BAO SHENG என்னும் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகால வரலாறுடைய இந்தக் கோயில், கி.பி. 503ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது. இக்கோயிலில், சீன தாங் வம்சக்காலத்தின் கற் சிற்பம், மிங் வம்ச காலத்தின் கட்டிடங்கள் ஆகிய தொல்பொருட்கள் உள்ளன. இதில், சுவர் புத்தர் சிற்பங்கள் மிகவும் அரிதானவை என்று வழிகாட்டி WANG YAN அம்மையார் அறிமுகப்படுத்தினார்.
இந்தச் சிலைகள், ஆயிரத்துக்கு அதிகமான ஆண்டுகளு்ககு முந்திய தாங் வம்சக்காலத்தில் செதுக்கப்பட்டன. வேறு புத்தர் சிற்பங்களைப் போல், இந்தப் புத்தர் சிலைகள், தரையில் தனித்தனியாக வைக்கப்படுபவை அல்ல, சுவரைச் சார்ந்து செலுக்கப்பட்ட திடமான சிற்பங்களாகும். கடல், மலை, மேகமூட்டம் ஆகியவை, அதன் பின்னணிகளாக உள்ளன. இது குறித்து, BAO SHENG கோயிலின் நிர்வாக அலுவலகத்தின் பணியாளர் LIU YANG அம்மையார் கூறியதாவது:
இது, இந்தச் சுவர் புத்தர் சிலைகளின் தனிச்சிறப்பியல்பாகும். பொதுவாக நாம் பார்க்கும் சிற்பங்களில், முப்பரிமாணத்தன்மை குறைவு. இந்தச் சிலைகள், புத்தர் உருவத்தை முக்கியமாகக் கொண்டு, இயற்கைக் காட்சியைத் துணை அம்சமாக்கி உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.


LU ZHI என்னும் பண்டைய வட்டத்தில், பயணியர்கள், பண்டைய கோயில் மற்றும் பண்டைய பாலங்களைப் பார்வையிட்டு, தொல் பொருட்களையும், பண்டைய மரங்களையும் பார்த்து ரசித்து மட்டுமல்ல, பண்டைய சாலையில் நடந்து செல்லும் போது, புதிய காட்சிகளையும் காண முடியும்.
நேயர்கள் இதுவரை, சியாங்சூ மாநிலத்தின் பண்டைய வட்டம் பற்றி கேட்டீர்கள். இத்துடன், இன்றைய சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி நிறைவடைகிறது.