நேற்று, மேற்குச் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த RIGEZE நகரில் திபெத் இன விவசாயிகள் நடத்தும் பார்லி மது தயாரிப்பு ஆலை இயங்கத் துவங்கியது.
இதன் விளைவாக, இவ்விடத்தில் ஆண்டுக்கு 120க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அதன் சுற்றுப்புறத்தின் 4 மாவட்டங்கள் மற்றும் நகரங்களிலுள்ள ஈராயிரம் ஹெக்டர் பரப்பளவுடைய நிலத்தில் மாசற்ற பார்லிகள் பயிரிடப்படுகின்றன. ஆண்டுக்கு 6000 டன் பார்லி மது உற்பத்தி செய்யப்படும். இதில் 50 விழுக்காடு, நேபாளம், இந்தியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
|