சிங்ஹை-திபெத் இருப்புப் பாதை நெடுகிலும் வன விலங்குகள்
cri
திபெத் மறிமான், திபெத் வனக் கழுதை உள்ளிட்ட வன விலங்குகள் சிங்ஹை-திபெத் இருப்புப் பாதையின் நெடுகிலுமான சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக உள்ளன. சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த விலங்கு ஆய்வுக் கூடமும் அழிவின் விளிம்பிலுள்ள விலங்குகளுக்கான சீன வனத் தொழில் பணியகத்தின் வட மேற்கு விலங்கு ஆய்வுக் கூடமும் இணைந்து மேற்கொண்ட அவதானிப்பும் ஆய்வும் இதைக் காட்டியுள்ளன.சிங்ஹை-திபெத் பீடபூமியில் வாழும் விலங்குகளின் வாழ்க்கை நடைமுறைக்கிணங்க, இந்த இருப்புப் பாதை நெடுகிலும் வன விலங்குகள் சென்றுவரும் பாதைகள் பல அமைக்கப்பட்டுள்ளன. தவிர, இப்பாதை நெடுகிலும் மொத்தம் 100 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட நீளமுடைய பாலங்களுக்கும் கால்நடை வளர்ப்புப் பண்ணைகளுக்கும் அருகில், வீட்டு வளர்ப்பு கால்நடைகளுக்கான 200க்கும் அதிகமான பாதைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன.
|
|