இவ்வாண்டு, வெளிநாடுகளிலான சீனாவின் நேரடி முதலீடு தொடர்ந்து வேகமாக வளரும். ஆண்டு முழுவதிலும் இத்தொகை, 1600 கோடி அமெரிக்க டாலரை எட்டக்கூடும். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகரிக்கக்கூடும். கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவின் மொத்த அன்னிய நேரடி முதலீட்டுத் தொகை, 7333 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 163 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில், 10 ஆயிரத்து 673 சீன முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது, வெளிநாடுகளில் சீன தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் போக்கில், நாடு கடந்த கொள்வனவு உள்ளிட்ட பலவகை வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சீன வணிக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2005ஆம் ஆண்டு முதல், லத்தின் அமெரிக்காவில் சீனாவின் முதலீட்டுத் தொகை, ஆசியாவிலான முதலீட்டுத் தொகையை முதன்முறையாக தாண்டி, முதலிடம் வகிக்கின்றது.
|