சீனாவின் சிங்ஹ-திபெத் இருப்புப்பாதையின் Gela பகுதி திட்டப்பணி, அண்மையில் அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் சோதனை முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாடு தழுவிய முக்கிய நிர்மாண திட்டப்பணிகளில் இந்த இருப்புப்பாதையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி மாதிரி முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுகின்றது. Germuக்கும் லாசாவுக்குமிடை திட்டப்பணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைமை கண்டிப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது. சீனாவின் இருப்புப்பாதை திட்டப்பணி நிர்மாண வரலாற்றில், வன விலங்குகள் பெருமளவில் குடியேறுவதற்கு வழி கட்டியமைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். சிங்ஹ-திபெத் பீடபூமியில் தாவரப்போர்வையை மீட்டு, மீண்டும் உருவாக்குவது பற்றிய அறிவியல் சோதனை, முதன்முறையாக வெற்றி பெற்றது. அன்றி திட்டப்பணியிலும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இருப்புப்பாதையின் ஓரத்தில் வன விலங்குகள் குடியேறுவதற்கான நிபந்தனைகள், பீடபூமியின் கடும் குளிர் நிலையில் தாவரப்போர்வை உருவாக்குவது, சதுப்பு நில உயிரின வாழ்க்கைச்சூழல் தொகுதி, இருப்புப் பாதையின் இரு பக்கங்களிலுள்ள இயற்கைக் காட்சிகள் ஆகியவை பயனுள்ள முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
|