• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-04 18:57:36    
இயற்கைக் கிராமங்களில் தொலைபேசி வசதி வழங்கும் திட்டப்பணி

cri
நாடு தழுவிய இயற்கைக் கிராமங்களில் தொலைபேசி வசதி வழங்கப்படும் திட்டப்பணியை சீனத் தகவல் தொழில் அமைச்சகம் அண்மையில் துவக்கியது. திட்டத்தின் படி, 2010ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதிலும், 20 குடும்பங்களுக்கு மேலான, மின்சார வசதியுள்ள இயற்கைக் கிராமங்களில் தொலைபேசி வசதி வழங்கப்படுவது அடிப்படையில் நிறைவேற்றப்படும்.
தற்போது, சீனாவில், 98.9 விழுக்காட்டு நிர்வாகக் கிராமங்களில் தொலைபேசி வசதி வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகக் கிராமங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இயற்கைக் கிராமங்களின் நிலப்பரப்பு மேலும் சிறியது. இக்கிராமங்களில் வாழும் மக்கள் தொகை மேலும் குறைவு. இவை மேலும் சிதறி பரவி கிடக்கின்றன. இயற்கைக் கிராமங்களின் எதார்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, குறைந்தது ஒரு தொலைபேசியாவது இயற்கைக் கிராமத்தின் பரப்பில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று தகவல் தொழில் அமைச்சம் விதிக்கின்றது.