வாணி -- இன்று ஒரு சாதாரன சீன உணவு வகையை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். செய்முறையும் தேவைப்படும் பொருட்களும் எளிதானது. இறைச்சி ஒன்றும் இல்லை. நீங்கள் வீட்டில் சமைக்கலாம்.
க்ளீட்டஸ் -- அப்படியா. நானும் கேட்கக் காத்திருக்கின்றேன்.
வாணி -- சரி, முதலில், தேவைப்படும் பொருட்களை கூறுகின்றேன்.
முட்டை 3
பச்சை மிளகாய் 1
உணவு எண்ணெய் 15 கிராம்
உப்பு 3 கிராம்
வெங்காயம் 8 கிராம்
க்ளீட்டஸ் – அவ்வளவு தானா?
வாணி -- ஆமாம். க்ளீட்டஸ், நேயர்கள் இவற்றைத் தயாரிக்கும் போது, நாங்கள் முட்டையின் பயன் பற்றி கூறலாமா?
க்ளீட்டஸ் -- கண்டிப்பாக. சீன உணவிலும் இந்திய உணவிலும் முட்டைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றோம்.
வாணி -- ஆமாம். தீயால் காயப்பட்ட தோல் பகுதியில் முட்டையின் வெள்ளை பகுதி பயன்படுத்தலாம். முட்டை ஓட்டை மாவாக்கி சாப்பிட்டால், வயிற்று நோயைக் குணம் செய்யலாம். உடலுக்கு கெகில் கொடுக்கலாமே.
க்ளீட்டஸ்-- முட்டையின் மஞ்சள் பகுதியில் lecithin, vitamine உள்ளது. வெள்ளைப் பகுதியில் புரதம், amino அமிலம் முதலியவை உள்ளன. வாழ்வில் நாளுக்கு ஒரு முட்டை சாப்பிட்டால், நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வாணி -- சரி, இப்போது, நான் செய்முறையைக் கூறுகிறேன்.
முதலில் உப்பை திறக்கப்பட்ட முட்டைகளில் நன்றாகக் கிளறவும். வெங்காயத்தை சிறிதளவாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாயைச் சுத்தம் செய்து, உள்ளே இருந்த விதைகளை நீக்கி, சிறிதளவாக நறுக்க வேண்டும்.
மிளகாய் தூண்டுகள்
பின்னர், வாணலியை அடுப்பின் மீது வைத்து, 5 விநாடிக்குப் பின், உணவு எண்ணெயை இதில் ஊற்றவும்.
வெங்காயத்தை இதில் போட வேண்டும். மணம் வந்த பிறகு, உடனடியாக, நறுக்கப்பட்ட பச்சை மிளகாயை கொட்டி, நன்றாக வதக்கவும். 2 நிமிடத்துக்குப் பின், முட்டைகளை வாணலியில் ஊற்றி, மிதமான சூட்டில் அரை நிமிடம் வேகவிடுங்கள். முட்டைகள் கெட்டியாக மாறும் போது, விரைவாக இதனை வறுக்க வேண்டும்.
க்ளீட்டஸ் -- அன்புள்ள நேயர்களே. இப்போது இன்றைய முட்டை உணவு தயாரிப்பு. மிகவும் எளிதான செய்முறை. அல்லவா?
வாணி -- முட்டைகளை உண்பதற்கு எந்த வகை தயாரிப்பு நல்லது என உங்களுக்கு தெரியுமா?
க்ளீட்டஸ் -- நீங்கள் சொல்லுங்கள்.
வாணி -- நீரில் நேரடியாக வேகவிடுவது மிக சிறந்த முறையாகும். சுமார் 100 விழுக்காட்டு ஊட்சச்சத்துகள் உடலுக்கு கிடைக்கலாம். எண்ணெயைப் பயன்படுத்தி வறுப்பதால், 97 விழுக்காடு கிடைக்கலாம்.
க்ளீட்டஸ் -- சரி. இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
|