• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-05 15:05:29    
பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான மயற்சி

cri
இது போன்ற தூய்மையான எரியாற்றல் பயன்பாடு மற்றும் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் திட்டப்பணிகள் சீனாவில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாண்டின் துவக்கத்தில், சீன அரசு ஐ.நா வளர்ச்சி மற்றும் திட்டப் பணியகத்துடன் ஒத்துழைத்து, சீனாவின் 12 மாநிலங்களில் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சிக்கான தொழில் நுட்பச் சேவை மையங்களைக் கட்டியமைக்கத் துவங்கியது. இந்த தொழில் நுட்பச் சேவை மையங்களுக்கு சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சு வழிகாட்டி, இவற்றின் பயனை உயர்த்தும் என்று இந்தத் திட்டப்பணியின் பொறுப்பாளரும், சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சின் அதிகாரியுமான Li gao தெரிவித்தார். அவர் கூறியதாவது,

இந்த 12 மாநில நிலை தொழில் நுட்ப சேவை மையங்களின் கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும். 100 முதல் 120 வரையான நிபுணர்கள் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள திட்டப்பணி சந்தைகளுக்கு அனுப்பப்படுவர். தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி முறைமையுடன் தொடர்பான பயிற்சிகளை வழங்குவோம். 1500 பேர் பயிற்சி பெற்ற பின், தூய்மையான எரியாற்றல் வளர்ச்சியுடன் தொடர்பான பணியில் அல்லது காலநிலை மாற்றத்துடன் தொடர்பான பணியில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்று விரும்புகின்றோம் என்றார் அவர்.
சீனாவின் பல்வேறு இடங்களில் காற்று மின்னாற்றல் நீர் மின்னாற்றல் முதலிய தூய்மையான எரியாற்றல் பற்றிய ஆய்வை இந்த மையங்கள் மேற்கொண்டு, பல்வேறு இடங்களின் வளர்ச்சி மதிப்புடைய தூய்மையான எரியாற்றல்களின் பதிவு பட்டியலை பதிக்கும். அதேவேளையில், முதலீட்டு நிறுவனங்களுக்கும் உள்ளூர் அரசுக்கும் இடையில் இவை ஒத்துழைப்பு வசதிகளை அமைத்து, பல்வேறு இடங்களில் தூய்மையான எரியாற்றல் திட்டப்பணிகளைக் கட்டியமைக்க அரசு சாரா மற்றும் வெளிநாட்டு முதலீட்டை உட்புகுத்தும்.


பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதில் சீன அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைச் சீனாவிலுள்ள ஐ.நா வளர்ச்சி மற்றும் திட்டப் பணியகத்தின் பிரதிநிதி Khalid Malik பாராட்டினார். அமைக்கப்பட்டு இயங்கி வரும் இந்த 12 தொழில் நுட்பச் சேவை மையங்கள், விரைவில் சீனாவில் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதன் பணியை மேலும் தொகுதியாகவும் தொழிலாகவும் மேற்கொள்ள செய்யலாம் என்று அவர் கருதுகின்றார். சீனாவின் தொடர்புடைய பணியை ஐ.நா வளர்ச்சி மற்றும் திட்டப் பணியகம் தொடர்ந்து கவனம் செலுத்தி ஆதரிக்கும் என்றார் அவர். அவர் கூறியதாவது, 
அரசுகளுக்கிடை காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய ஐ.நாவின் சிறப்பு ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, காலநிலையின் மாற்றம் முழு உலகம் எதிர்நோக்கும் மிக அவசர பிரச்சினைகளில் ஒன்றாகும். காலநிலையின் மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பைச் சமாளிப்பதில் சீனாவுக்கு உதவி அளித்து, மேலும் தொடர்ச்சியான, பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை மேலும் குறைக்கும் வளர்ச்சி பாதையை உருவாக்குவது ஐ.நா வளர்ச்சி மற்றும் திட்டப் பணியகத்தின் முக்கிய பணியாகும் என்றார் அவர்.
2006ம் ஆண்டு துவங்கிய சீனாவின் 11வது ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்தின் படி, 2010ம் ஆண்டு வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கான எரியாற்றல் பயன்பாடு 2005ம் ஆண்டின் இறுதியில் இருந்ததை விட 20 விழுக்காடு குறைக்க வேண்டும். அதேவேளையில், புதுப்பிக்கவல்ல எரியாற்றல், முழு எரியாற்றல் கட்டமைப்பில் வகிக்கும் விகிதமும் 10 விழுக்காடு அதிகரிக்க வேண்டும். சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சின் துணை அமைச்சர் லியு யேன் குவா கூறியதாவது,


11வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம், வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்சகம் முதலிய அரசு வாரியங்களின் ஒத்துழைப்பில், தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி துறையில் வளர்ந்த நாடுகள், தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் சாராம்ச ரீதியான ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும். சர்வதேச சமூகத்துடனான கூட்டு முயற்சியின் மூலம், உலகின் காலநிலையைப் பாதுகாப்பதில் பங்காற்ற சீனா விரும்புகின்றது என்றார் அவர்.