• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-05 15:41:32    
நண்பர்கள் நிகழ்ச்சிகள்

cri

கலை......... தி. கலையரசியும் கிளீடஸும் நண்பர்கள் நிகழ்ச்சிகளை கேட்டு தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.
கிளீ...... காங்கேயம் மலர் ரமேஷ் மன்றத்தின் வளர்ச்சி பற்றி தெரிவித்த தகவல்.
அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் செயலாளர் அண்ணன் பல்லவி கே பரமசிவன் அவர்கள் காங்கேயம் வந்து என்னை சந்தித்தார். காங்கேயத்தில் கூடிய விரைவில் சீன வானொலி நேயர் மன்றம் அமைப்பது பற்றி ஆலோசனை முன்வைத்தார். எங்கள் மன்றம் ஆரம்பிப்பதற்கு அவர் உதவுவதாகக் கூறினார். பாராட்டுகின்றோம். இப்போது சீன வானொலி மலர் டிஜிட்டல் ஸ்டுடியோ தமிழ் நேயர் மன்றம் நிறுவப்பட்டது என்று மலர் டிஜிட்டல் ஸ்டுடியோ தமிழ் நேயர் மன்றத்தின் மலர் ரமேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.


கலை......அடுத்து கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் எரி ஆற்றல் சிக்கனம் குறித்த சீன அரசின் முயற்சி பற்றி பெரிய காலாப்பட்டு பி சந்திரசேகரன் தெரிவித்த கருத்து. இன்றைய காலகட்டத்தில் இத்தகைய நடவடிக்கை மிகவும் தேவையாகும். எரி ஆற்றல் சிக்கனத்தின் மூலம் நாட்டின் பொருளாதார இழப்பை தவிர்க்க முடியும். மேலும் இயற்கை அளித்துள்ள எரியாற்றலுக்கு மாற்று எரி பொருளை தயாரிக்க தேவையான பொருட்கள் யாவை என்பதையும் அறிய முடிந்தது என்று அவர் கூறினார்.
கிளீ.......சீனாவில் தொடர் வண்டியின் மூலம் பயணம் செய்த மக்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியுள்ளது என்ற செய்தியை கேட்ட பின் வேலூர் பி முத்து தெரிவித்த கருத்து இதோ. இது சீனாவின் பண்டிகைக் காலம் மற்றும் வசந்த விழாக்களின் போது மக்கள் தொடர் வண்டியினை பயன்படுத்துவதை தெரிவு செய்தன் காரணமாகும். சீன மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்றார் அவர்.
கலை......அடுத்து இலங்கை காத்தான்குடி-6 ஏ.எல்.எம் அஹ்மட்டின் கடிதத்தை பார்க்கின்றோம். 2007ம் ஆண்டுக்கான அழகான நாட்காட்டி கிடைத்தது. இடையிடையே கிடைக்கும் வர்ண அட்டைகள் விதவிதமான சித்திரங்கள் பல்வேறு விடயங்களை தாங்கி வரும் சீனத் தமிழ் ஒலி இவையெல்லாவற்றிற்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள். சீன வானொலியின் சிறப்புப் பணிகள் மென்மேலும் வளர்ந்தோங்குக என்று அஹமட் கூறினார்.


கிளீ............இங்கே இலங்கை காத்தான்குடி-1 எம். எப் லகீப்பாவின் கருத்தை பார்க்கலாமா.
சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகள் யாவும் மிக நன்றாக போய்க் கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்பத்தக்க முறையில் அவை அமைந்துள்ளன. புதன் கிழமையில் இடம் பெறும் மலர்ச் சோலை மிகவும் விரும்பி கேட்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. அதிலுள்ள விபரங்கள் கல்வியறிவு மிக்கவை. மாணவர்களாகிய எங்களுக்கு மிக உபயோகமாக உள்ளன என்று லகீப்பா கூறினார்.
கலை.......இங்கே கொழும்பில் படிக்கின்ற 14 வயதான மாணவர் எம். ஆர். எம் ஷாப்ரன் மற்ற நேயர்களைப் போலவே நிகழ்ச்சிகளை கேட்டு கருத்து தெரிவித்தார். அவருக்கு மிக பிடிக்கும் நிகழ்ச்சி சீன இசை நிகழ்ச்சியாகும்.

கிளி........அடுத்து சீன மக்களின் சமூக வாழ்வுகள் எவ்வாறு நட்பாக இருக்கின்றது என்பதை சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி மூலம் புரிந்து கொண்டோம். நமது சீன வானொலி பல தகவல்களை எங்களுக்கு வழங்குகின்றது. மன மார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என்று பெரம்பலூர் கல்லாத்தூர் லெட்சுமி பாசமுடன் கூறினார்.
கலை..........அடுத்து 2007ம் ஆண்டு முதல் சீன அரசு ஏற்றுமதி இறக்குமதி வரியை வசூல் செய்ய உள்ளது என்பதை கேட்டேன். இந்த வரி வசூலிப்பு மூலம் பல நல்ல திட்டங்களில் வசூலிக்கப்பட்ட வரித் தொகையை சீன அரசு செலவு செய்து சீன மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் என்று நம்புவதாக எஸ் கே. பாப்பம் பாளையம் பி.தி.சுரேஷ்குமார் கூறினார்.


கிளீ.......அடுத்து சீனாவில் இன்பப் பயணம் பற்றி குருவம்பட்டி பி தாண்டவன் தெரிவித்த கருத்து இதோ.
புத்த கோயில் பசுமைப் பூங்கா கடலை ஒத்த ஏரி அதிசய மிருகம் அற்புத முத்து மூலிகை வெந்நீர் ஊற்று பெருஞ்சுவர் எத்தனை அழகு நிறைந்த காட்சிகள் காண அழைக்கும் சீன வானொலி. பொன்னிறக் குரங்கு, புரட்சிக்காடு இவற்றைக் காண நம் கண்களை அழைக்கும் சீன வானொலி. தன்னுடைய மண்ணில் சுற்றுலாத் துறையை வளர்த்து நாளும் பொன் மணி குவிய சீன அரசுக்கு உதவுமே என்று குருவம்பட்டி பி தாண்டவன் பாராட்டினார்.
கலை........சீனத் தேசிய இனக் குடும்பத்தில் மௌனான் இன மக்களைப் பற்றி மிகவும் விரிவாக தெரிந்து கொண்டேன். பள்ளத் தாக்கில் வசித்து பின் சமவெளியில் வசித்து பயன் அடைந்த லூஜியே என்பவரைப் பற்றி கூறியதைக் கேட்டேன். பள்ளத்தாக்கில் வசிக்கும் போது பாதை சரியில்லா நிலையிலேயே வசித்த மௌனான் இன மக்களை நினைத்து பெருமைப்படுகின்றேன் என்று மறைமலை நகர் சி மல்லிகா தேவி கூறினார்.