• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-06 14:43:39    
Cheng Du நகரில் உள்ள தைவான் விவகார அலுவலகம்

cri

Si Chuan மாநிலத்தின் தலைநகர் Cheng Du, பெருநிலப்பகுதியின் தென் மேற்கில் அமைந்துள்ளது. இந்நகர், தைவானிலிருந்து தொலைத்தூரத்தில் உள்ளது. இருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக, Si Chuan மாநிலப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியுடன், மேலும் கூடுதலான தைவான் உடன்பிறப்புகள், வணிக வாய்ப்பை நாட அங்கு வந்துள்ளனர். அவர்களும், அவர்களுடைய குடும்பத்தினர்களும் இங்கு நீண்டகாலமாக தங்கி, Cheng Du நகரை தமது இரண்டாவது சொந்த ஊராகக் கருதுகின்றனர். தைவான் உடன்பிறப்புகள் Cheng Du நகரில் மேலும் செவ்வனே பணி புரிந்து வாழ்வதற்குத் துணை புரியும் பொருட்டு, Cheng Du நகராட்சி அரசின் தைவான் விவகார அலுவலகம் சளையாத முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

தைவான் வணிகர்கள் Cheng Du நகரில் தங்கி தடையின்றி லட்சியத்தை வளர்ப்பதற்குத் துணை புரியும் பொருட்டு, அவர்களுக்கு சிறந்த முதலீட்டுச் சூழலை உருவாக்க இவ்வலுவலகம் பாடுபட்டு வருகின்றது. தைவான் வணிகர் புகார் மையத்தை, தைவான் விவகார அலுவலகம் சிறப்பாக நிறுவியது. தைவான் வணிகர்கள் முதலீடு செய்யும் போக்கில், சந்திக்கும் பொருளாதார மற்றும் சிவில் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு இம்மையம் பொறுப்பேற்கின்றது. எந்த இன்னல் ஏற்படும் போதும், தைவான் வணிகர்களும், தைவான் உடன்பிறப்புகளும், இப்புகார் மையத்துக்கு நேரடியாக புகார் செய்யலாம். தைவான் விவகார அலுவலகத்தின் தொலைபேசி எண்ணும், தொடர்புடைய பணியாளர்களின் செல்லிடபேசி எண்ணும், பகலும் இரவும் சேவை வழங்க சமூகத்துக்கு வெளியாக்கப்பட்டுள்ளது. Cheng Du நகராட்சி அரசின் தைவான் விவகார அலுவலகத்தின் Lei Qing Fa கூறியதாவது:

பரிமாற்றும் நடவடிக்கை

"சில சமயத்தில், நள்ளிரவு இரண்டொரு மணியளவில், சிலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, எங்கள் உதவி, உடனடியாகத் தேவைப்படுவதாக கூறினர். பொதுவாக, தைவான் வணிகர்கள் புகார் செய்யும் வழிகள் விரிவாகியுள்ளன. அவர்கள் இணைய தளத்தில் புகார் செய்யலாம். தொலைபேசி மூலம் புகார் செய்யலாம். இங்கு நேரில் வந்தும் புகார் செய்யலாம். புகாரின் பயன், முன்பை விட தெள்ளத்தெளிவாக உயர்ந்துள்ளது" என்றார், அவர்.

2006ஆம் ஆண்டு, Cheng Du நகரில் உள்ள தைவான் வணிகர் புகார் மையத்தில், தைவான் உடன்பிறப்புகள் மற்றும் தைவான் வணிகர்களின் சுமார் நூறு புகார்கள் கையாளப்பட்டன. 97 விழுக்காட்டு புகார்கள் சிறந்த முறையில் தீர்க்கப்பட்டன. தைவான் வணிகர்கள் 2 கோடியே 70 லட்சம் யுவான் மதிப்புள்ள இழப்புத் தொகையை மீட்டனர். இப்புகார் மையம், தைவான் வணிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Cheng Du நகராட்சி அரசின் தைவான் விவகார அலுவலகம் உள்ளிட்ட அமைப்புகளின் முயற்சிகளுடன், கடந்த சில ஆண்டுகளாக, இந்நகருக்கு வந்து முதலீடு செய்யும் தைவான் வணிகர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது. தற்போது, இந்நகரில் சுமார் 700 தைவான் முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை, 150 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.

பெருநிலப்பகுதியில் உள்ள 150க்கு அதிகமான நகரங்களின் முதலீட்டுச் சூழல் மற்றும் ஆபத்தும் பற்றி தைவானின் தொடர்புடைய தொழிற்சங்கம் அடுத்தடுத்து மூன்று ஆண்டுகள் காலம் ஆய்வு செய்து, மதிப்பீடு செய்தது. மிக உயர் நிலையுடைய "பரிந்துரை நகரங்களின்" அணியில் நுழைந்தது.

1 2