• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-07 18:51:20    
சீனாவில் உள்ள இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள்

cri
சீனாவில் இது வரை, பலதரப்பட்ட 2395 இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் நிலப்பரப்பு, 15 லட்சத்து 10 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். இது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 15 விழுக்காட்டுக்கு மேலாகும்.
இன்று சீனத் தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமை அலுவலகத்திலிருந்து எமது செய்தியாளர் இவ்வாறு அறிவித்தார்.
வனம், புல்வெளி, சதுப்பு நிலங்கள், பாலைவனம் உள்ளிட்ட பல்வகை இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் சீனாவில் நிறுவப்பட்டுள்ளன. சீனாவில் பெரும்பாலான நில இயற்கை உயிரின வாழ்க்கைச்சூழல் முறைமையும், வன விலங்குகள் மற்றும் தாவரங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பும், உயிரினங்களின் பல்வகைத்தன்மையும் உரிய முறையில் பேணிக்காக்கப்பட்டுள்ளன. இயற்கை பாதுகாப்பு மண்டலங்களின் உருவாக்கத்தைத் தூண்ட, இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் தொடர்புடைய திட்டத்தை சீனா வகுத்து, இவற்றின் மீதான கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளது.