இவ்வளவீட்டுப் பணி, சீனாவின் 13 மாநிலங்கள் தன்னாட்சிப்பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களில் நடைபெறும். மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பகுதி பற்றிய ஆய்வுப் பணி, அடுத்த ஆண்டின் முற்பாதியில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

73வயதான பளுத்தூக்கல் சாம்பியன்
உலகில், மிக அதிக வயதுடைய பளுத்தூக்கல் சாம்பியன் என்ற பெருமை, ரஷியாவைச் சேர்ந்த ஈகோர் கோரிட்மான் என்பவரையே சாரும்.
73 வயதான இம்முதியவர், படுத்தபடி பளுத் தூக்குவதில், 3 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆண்டுகளுக்கு முன், உடல் பருமனைக் குறைக்க, அவர் உடல் கட்டழகுப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது முதல், பளுத் தூக்கல் விளையாட்டில் அவர்தம் திறமையைக் காட்டி வருகிறார்.
2004 இல் நடைபெற்ற ரஷிய தேசிய பளுத் தூக்கல் போட்டியில், 100 கிலோகிராமுக்கு அதிகமான உடல் எடையுடைய, 70 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், படுத்தபடி பளுத் தூக்குவதில் அவர் முதலிடம் பெற்றார். அத்துடன், அமெரிக்க வீரர் ஒருவர், முன்னர் 7 ஆண்டுகளாக நிலைநாட்டி வந்த உலக சாதனையையும் முறியடித்தார். இதனால் ரஷியாவின் "பளுத் தூக்கி" என அவர் போற்றப்பட்டுள்ளார்.
முயல் தலைப் பூனை
முயல் போல் காட்சியளிக்கும் காட்டுப் பூனை ஒன்றை, சுகாட்லாந்து அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு வகை அற்புத வனவிலங்கு என்று கருதப் படுகிறது.
சாதாரண பூனையின் தலையை விட இப்பழுப்பு நிற விலங்கின் தலை சிறியது. அதன் உதடுகள் தடிப்பானவை. காதுகளும் பற்களும் நீளமானவை. இவற்றின் காரணமாக, அது முயல் போல் தோற்றமளிக்கின்றது.
ஆய்வுப் பணிக்குப் பயன்படுவதற்குத் தற்போது அதன் 2 பிணங்கள் மட்டும் உள்ளன. ஆகவே, இத்தகைய முயல் தலைப் பூனைகள் சிலவற்றை உயிருடன் பிடிக்குமாறு சுகாட்லாந்தின் தொடர்புடைய நிறுவனம், அங்குள்ள வேட்டையாடல் பண்ணையை வேண்டிக்கொண்டுள்ளது. 1 2
|