சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலம், சிசுவான் மாநிலத்தின் யீ பினின் புறநகரில் அமைந்துள்ளது. மூங்கில் இயற்கைக் காட்சியை முக்கிய தனிச்சிறப்பியல்பாக கொண்டு, தொல் பொருட்களுடைய காட்சி இடமாகும். இதன் பரப்பளவு, 120 சதுரக் கிலோமீட்டராகும். இம்மண்டலத்தில், 70 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பில் மூங்கில்கள், சுமார் 500 மலைகளில் நிறைந்து, பச்சைக் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால், இது, மூங்கில் கடல் என்று அழைக்கப்படுகிறது. இம்மண்டலத்தின் பணியாளர் லின் வேய் கூறியதாவது:

இந்த மூங்கில் கடலில், NAN மூங்கில், மிகவும் அதிகமாகும். இந்த வகை மூங்கில், ஆண் மற்றும் பெண் இனங்கள் கொண்டது. அனுபவம் மிக்க விவசாயிகள், ஆண் மூங்கிலையும் பெண் மூங்கிலையும் அடையாளம் கண்டுக் கொள்ளலாம். மூங்கிலின் முதலாவது கிளையைப் பார்த்து, தனியாக ஒரு கிளை உள்ள மூங்கில், ஆண் மூங்கிலாகவும், இரு கிளைகள் உள்ள மூங்கில், பெண் மூங்கிலாகவும் வேறுபடுத்தப்படுகின்றன என்றார் அவர். இந்த மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தில், 400க்கு அதிகமான வகை மூங்கில்கள் உள்ளன. NAN மூங்கில் தவிர, பல அரிய மூங்கில் வகைகள், உண்டு. இதில், மனித முகத்தைப் போன்ற மூங்கில், குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மூங்கிலின் கனுக்கள், மட்டமாக வளர்கின்றன. மனித முகத்தைப் போன்ற மூங்கிலின் கனு, சாய்வாக வளர்கிறது.

ஒவ்வொரு கனும், குழந்தையின் முகத்தைப் போன்றது. வழிகாட்டிகள் அறிமுகப்படுத்தாத வரை, மூங்கில் கடலில் முதல் முறை சென்று பார்வையிரும் பயணிகள், இதை மூங்கிலாக கருதப் போவதில்லை. இந்த மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தில், மூங்கில் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. இதில் 58 அரிய மூங்கில் வகைகள் காணப்படலாம். 1986ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்ட இந்த மூங்கில் அருங்காட்சியகம், சீனாவில் முதல் சிறப்பு மூங்கில் அருங்காட்சியகமாகும். அதன் முக்கிய கட்டிடங்களின் பரப்பளவு, 3800 சதுர மீட்டராகும். பல்வேறு வகை மூங்கில் மாதிரிகள், மூங்கில் ஆயுதங்கள், மூங்கில் இசைக் கருவிகள் முதலிய மூங்கில் கலைப்பொருட்கள், இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம், சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் கடலின் தரமிக்க மூங்கில்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை என்று லீன் வேய் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

இது, சீனாவில், மூங்கிலை முதன்மையாகக் கொண்ட முதலாவது சிறப்பு அருங்காட்சியகம் ஆகும். உலகளவில் மிக சிறிய மூங்கில் வகையான CUI மூங்கில், ஒட்பீட்டளவில் உயரமான NAN மூங்கில் முதலியவை இதில் இடம்பெறுகின்றன என்றார் அவர். இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயிலிருந்து வெளியே சென்று, காட்சி மண்டலத்தின் பாதையில் நடந்து சென்றால், "கடலுக்குள்ளே கடல்"என்னும் மற்றொரு காட்சியிடத்துக்கு வந்தடையும். அதன் நுழைவாயில், சிசுவான் பிரதேசத்தின் பாரம்பரிய வளைவின் வடிவத்தை மாதிரியாக கொண்டு கட்டியமைக்கப்பட்டது. சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தின் பள்ளத்தாக்கில் "கடலுக்குள்ளே கடல்" என்னும் காட்சி இடம், அமைந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவான இந்த ஏரி, மூங்கில் கடலிலுள்ள ஒரு சிறிய கடல் போன்றது. எனவே, இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. பயணியர்கள், மூங்கில் கட்டுமரம் மூலம், ஏரியைச் சுற்றுவந்து காட்சிகளைக் கண்டு களிக்கலாம் என்று, வழிகாட்டி HU TONG LIN கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

நான் இப்போது பெரிய மூங்கில் கடலில் இருக்கின்றேன். இந்த ஏரியை கடலாக, உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். படகில் இந்த ஏரியைச் சுற்றிப் பார்த்தால், சுற்றி எங்கும் மூங்கில் நிறைந்து காணப்படும் என்றார் அவர்.
|