
சிசுவான் மாநிலத்தின் தலைநகரான செங்தூவிலிருந்து புறப்பட்டு, பேருந்து மூலம், சுமார் 3 மணி நேர பயணத்துக்குப் பின், இந்த மூங்கில் கடல் இயற்கைக் காட்சி மண்டலத்தை வந்தடையலாம். நுழைவுச்சீட்டு, இரண்டு விலை உண்டு. ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் திங்களில், ஒவ்வொருவருக்கும் 60 யுவானாகும். மற்ற நேரத்தில் ஒவ்வொருவருக்கும் 85 யுவானாகும். இந்த மண்டலத்தில் வசதியான ஹோட்டல் உள்ளது. மூங்கில் தயாரிப்பு கலைப்பொருட்கள், உள்ளூரின் தனிச்சிறப்பான வணிகப் பொருட்களாகும்.
|