• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-08 16:56:17    
பல்கலைக்கழகங்களில் ஒலிம்பிக் திடல்களும் அரங்குகளும்

cri

 சீன வேளாண் பல்கலைக்கழகத்திலும் பெய்சிங் அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்திலும், ஒலிம்பிக் மல் போர், ஜூடோ taekwondo ஆகிய ஆட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதைப் பார்ப்போம்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மல் போர் அரங்கம் பெய்சிங்கின் வட பகுதியிலுள்ள சீன வேளாண் பல்கலைக்கழக்கத்தில் அமைகின்றது. இதன் கட்டிட பரப்பளவு 23 ஆயிரம் சதுரமீட்டருக்கு அதிகமாகும். வடிவமைத்த 8000 இருக்கைகளில் 6000 இருக்கைகள் நிலையானவை. 2000 இருக்கைகள் தற்காலிகமானவை.

சீன வேளாண் பல்கலைக்கழகம் வேளாண் துறையிலான உயர் நிலைக் கல்வி நிலையமாகும். 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவரைக் கொண்ட இப்பல்கலைக்கழகம் 1905ம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்யும் உரிமையைப் பெய்சிங் பெற்ற பின், இப்பல்கலைக்கழகம் பல்கலைக்கழ வளாகத்தில் ஒலிம்பிக் ஆட்ட அரங்கத்தை அமைக்க முதலாவதாக விண்ணப்பித்த உயர் கல்வி நிலையமாகும்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஜூடோ மற்றும் taekwondo அரங்கம், பெய்சிங் அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் அமைகின்றது. இது 8000 இருக்கைகளை கொண்டதாக அமையும். பெய்சிங் அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் பொறியியல் பின்னணிகொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.