• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-08 10:38:00    
சீன மகளிர் மற்றும் குழந்தைகள்

cri
இந்த சாதனைகளை பெற்றதோடு, தற்போது, மகளிர் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி, சில பிரச்சினைகளையும் இன்னல்களையும் எதிர்நோக்குகின்றது. எடுத்துக்காட்டாக, அவர்களின் வளர்ச்சியில் நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்குமிடையில் இடை வெளி நிலவுகின்றது. அவர்களின் உடல் நல நிலைமை, மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்காக, தொடர்ந்து பயனுள்ள நடவடி்ககைகள் மேற்கொண்டு, மகளிர் மற்றும் குழந்தைகளின் நலனையும் உரிமையையும் சீன அரசாங்கம்,முழுமையாக பாதுகாக்கும் என்றார் வாங் ச்சி யீ.
சீனாவில் பத்து கோடி விவசாயிகள், நீண்டகாலமாக வெளியூர்களில் பணி புரிகின்றனர். அவர்களின் குழந்தைகள், கிராமப்புறங்களில் தனியாக வாழ்கின்றன. நீண்டகாலமாக, பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ முடியாமல் இருந்ததால், குழந்தைகள் பெறும் பெற்றோரின் அன்பு குறைவாக உள்ளது. குழந்தைகளின் மீதான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பும் போதிய அளவில் மேற்கொள்ளப்பட முடியவில்லை. இதனால், அவர்களின் வளர்ச்சி, கல்வி பாதுகாப்பு ஆகியவற்றில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. தற்போது, இத்தகையக் குழந்தைகளின் எண்ணிக்கை, 2 கோடியாகும். அவர்களின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை சூழல் கவனிக்கப்பட வேண்டியவையாகும். இத்துறையிலான பணியை சீன அரசு மேலும் வலுப்படுத்தும் என்றார் வாங் ச்சிங் யீ. அவர் கூறியதாவது


கிராமப்புறங்களில் தனியாக வாழ்கின்ற குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை பிரச்சினையை தீர்க்கும் வகையில், கிராமப்புறங்களில் உறைவிட வசதியுடைய பள்ளிகளில் கட்டுமானத்தை சீன அரசு விரைவுப்படுத்தும். அடிப்படை நிலையான அரசாங்கம், பள்ளி, குடும்பம், சமூகம் ஆகியவை கூட்டாக பங்கெடுக்கும் ஒட்டுமொத்த ஆதரவு வலைப்பின்னலை உருவாக்குவதன் மூலம் அவர்களை செவ்வனே பாதுகாப்பது பற்றிய நீண்ட கால பயனுள்ள பணி முறைமையை ஆராய்ந்து மேம்படுத்த வேண்டும். குடும்பக் கல்வி வழிக்காட்டுதல் மற்றும் சேவை பணி மேலும் வலுப்படுத்தப்படும், இத்தகைய குழந்தைகளின் கண்காணிப்பாளர்களுக்கு வழிக்காட்டு பயிற்சி வழங்கப்படும் என்று வாங்ச்சிங்யீ கூறினார்.


இவ்வாண்டு முதல், அனைத்து கிராமப்புறங்களிலும் சீன அரசாங்கம் கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்தி கல்விச் செலவை நீக்கத் துவங்கியுள்ளது கிராமப்புறத்திலுள்ள சுமார் 15 கோடி துவக்க மற்றும் இடை நிலை பள்ளி மாணவர்கள் இதன் மூலம் நன்மை பெறுவார்கள் என்று தெரிய வருகிறது. இளம் வயதினர்கள் கல்வி பெறும் உரிமையை மேலும் பாதுகாக்கும் வகையில், சீனாவின் தொடர்புடைய வாரியங்கள், திட்டத்தை உருவாக்கி, எதிர்காலத்தில் நகர் வாழ் வட்டாரத்தின் மாணவர்களின் கல்வி செலவை நீ்க்கும் என்று தெரிய வருகிறது