
2007ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்து மகளிர் கைப்பந்து போட்டி, ஜூன் 5ம் நாள் முதல் 10ம் நாள் வரை மோங்த்லு நகரில் நடைபெற்றது.
பெய்ஜிங் நேரப்படி, ஜூன் 6ம் நாள், சீன அணியின் முதல் ஆட்டம் முடிவடைந்தது. சீன அணி, துருக்கி அணியை 3-1 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்து, முதல் வெற்றி பெற்றது.
கடந்த சில ஆண்டுகளில், பயிற்சியாளர் Neslihan தலைமையிலான துருக்கி மகளிர் கைப்பந்து அணி, தெளிவாக முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆனால், சீன அணி, வலுவான ஆற்றலுடன் துருக்கியை தோற்கடித்தது.
பெய்ஜிங் நேரப்படி, ஜூன் 7ம் நாள், நடைபெற்ற 2வது ஆட்டத்தில், சீன அணி, போலந்து அணியை 3-0 என்ற ஆட்ட கணக்கில் எளிதில் வென்றது.
|