• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-12 14:59:54    
சீனாவின் குடும்ப நலத் திட்டம்

cri
சீனாவின் மக்கள் தொகை 130 கோடியாகும். மக்கள் தொகை அளவுக்கு மீறி அதிகரிக்காமல் தவிர்க்கும் வகையில், கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகள் முதல், சீனாவில் குடும்ப நலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படத் துவங்கியது. இக்கொள்கையை பயன் தரும் வகையில் நடைமுறைப்படுத்துவதுடன் மக்களின் வாழ்க்கையைக் கவனிக்கும் பொருட்டு, கடந்த சில ஆண்டுகளில், சில கிராமப்புறங்களில் சீன அரசு ஒரு புதிய குடும்ப நலத் திட்டப் பணி முறையை ஆய்வு முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. குடும்ப நலத் திட்டத்தைப் பின்பற்றிய குடும்பங்களுக்குப் பரிசு வழங்குவதன் மூலம், மக்களின் சுய விருப்பத்துக்கு ஊக்கம் அளிப்பது என்ற இந்த புதிய வழிமுறை மிகச் சிறந்த பயன் பெற்றுள்ளது.

69 வயதான Luo Cuian அம்மையார் தென் மேற்குச் சீனாவிலுள்ள யூன்னான் மாநிலத்தில் வாழும் ஒரு சிறுபான்மை தேசிய இன முதாட்டி ஆவார். அவருக்கு ஒரு மகள் மட்டும் உண்டு. தற்போது, சாதாரண முதியோர் உதவித் தொகை பெறுவதை தவிர, அவருக்கு ஆண்டுக்கு 700 யுவான் உதவி தொகை கிடைக்கலாம். அவர் மகிழ்ச்சியுடன் கூறியதாவது,

அரசு சிறந்த கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றது. எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு மேலும் 700 யுவான் கிடைக்கப் பெற்றுள்ளேன் என்றார் அவர்.
2004ஆம் ஆண்டு முதல் சில கிராமப்புறங்களில் குடும்ப நல திட்ட உதவி கொள்கையை அரசு நடைமுறைப்படுத்தத் துவங்கியது. இந்தக் கொள்கையின் படி, 60க்கு மேலான வயதுடைய முதியோர்களுக்கு ஒரு பிள்ளை அல்லது 2 மகள்கள் மட்டும் இருந்தால், ஆண்டுக்கு அரசிலிருந்து குறைந்தது 600 யுவான் உதவித் தொகை கிடைக்கலாம்.


சீனாவின் கிராமப்புறங்களில், சமூகக் காப்பீட்டு அமைப்புமுறை மேம்படாததால், முதியோர் காப்பு பிரச்சினை சொந்த குழந்தைகளால் தீர்க்கப்பட வேண்டியிருந்தது. கிராமப்புறங்களில் மக்கள் அதிகமான பிள்ளைகள் பெற விரும்பிய காரணங்களில் இது முக்கிய ஒன்றாகும். இந்த உதவி கொள்கை, கிராமப்புற மக்களின் கவலையை ஓரளவில் தணிவு செய்து, விவசாயிகளின் இனப்பெருக்கக் கருத்தை மாற்றுவதற்குத் துணை புரிந்துள்ளது.


இந்த உதவி கொள்கையைத் தவிர, மேற்கு பகுதியில் குறைந்த பிறப்பு, வேகமான வளம் என்னும் திட்டப்பணி நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மேற்கு பகுதியில் சுய விருப்பத்தின் படி குடும்ப நலத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய தம்பதிகளுக்கு மேலும் அதிகமான நிதி உதவி வழங்கப்படுகிறது. அதேவேளையில், ஆடு மற்றும் மாடு வளர்ப்பிலும் இதர உற்பத்தியிலும் பரிசு பணத்தைப் பயன்படுத்தி, வாழ்க்கையை மேம்படுத்துவதில் அரசு மக்களுக்கு ஊக்கம் அளிக்கின்றது.

 
இந்தத் திட்டப்பணி நல்ல பயன் பெற்றுள்ளது. சீன மக்கள் தொகை மற்றும் குடும்ப நலத் திட்டக் கமிட்டியின் தலைவர் சான் வே ச்சின் கூறியதாவது,