• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-12 15:16:47    
திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் இது பற்றி தெரிவித்த கருத்து

cri
கலை......... தி. கலையரசியும் கிளீடஸும் நண்பர்கள் நிகழ்ச்சிகளை கேட்டு இமேல் மூலம் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.
கிளி.....திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் இது பற்றி தெரிவித்த கருத்து.
சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் சீன நாடகத்துறையின் 100வது ஆண்டு நிறைவு குறித்தும், தலைசிறந்த நாடகமான 'தேநீர் விடுதி' நாடகம் குறித்தும் கலையரசி தொகுத்து ஒரு தகவல் திரட்டு வழங்கினார். சீன நாடகத்தினை இரவில் பார்த்து ரசித்த அந்த நாள் நினைவுகள் மறக்க முடியாது. அனைத்தும் வீதியோரங்களில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுபவை. ஆவிகளுக்கென்று விழா எடுக்கும் போது இந்த வீதியோர நாடகத்தை பார்த்ததுண்டு. ஒப்பனைகளுக்கு அவர்கள் எத்தனை மணிநேரம் செலவிடுவார்களோ தெரியவில்லை.. ஒப்பனை செய்து கொள்வதுதான் கடினமானது என நான் நினைக்கின்றேன். நிகழ்ச்சியில் சீன நாடகத் துறையின் புகழ் வளர்ச்சி ஆகியவற்றைதெரிவித்தமை சிறப்பான தகவல்கள் ஆகும்.
கலை......பாண்டிச்சேரி பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரனின் கருத்து
சீனாவின் இன்ப பயணம் நிகழ்ச்சியில் உலக மரபு செல்வங்களில் ஒன்றான குவாங்ஷான் மலைக்கு இன்று இன்பப் பயணம் நிகழ்ச்சி மூலம் சென்று வந்தது. மகிழ்ச்சிதான். அந்த மலையில் உள்ள தேவதாரு மரங்கள் பற்றிய பல செய்திகளை கலைமகள் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த மலையின் மேல் நின்று, கல்குரங்கு மற்றும் மேகக் கடல் காட்சியையும் காண எங்களுக்கு இரண்டு கண்கள் போதாது என்ற உண்மையை அறிந்தேன். உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் புகழ் பெற்று விளங்கும் இந்த குவாங்ஷான் மலை. இறைவன் அளித்த இன்ப பொக்கிஷமாகவே நான் நினைக்கிறேன்.
.கிளி.............. வளவனூர் முத்துசிவக்குமரன்
தங்களின் இணைய தளத்தை இன்று பார்த்தேன். கடந்த 30 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார அதிகரிப்பு 9.67 சதவீதமாகவும், உலகின் மற்ற நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு 3.3 சதவீதமாக மட்டுமே உள்ளது என்ற தகவலை படித்தேன். சீன மக்களின் கடும் உழைப்பாலும், சரியான தலைமையின் வழிகாட்டுதலாலும் இது சாத்தியமாயிருக்கிறது. இந்த பொருளாதார அதிகரிப்பு, இனி வரும் காலங்களிலும், ஏறுமுகத்தில் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மே தினக் கொண்டாட்ட புகைப்படங்களையும் கண்டு களித்தேன். உழைப்பால் உயர்ந்த சீன மக்களுக்கு மே தினம் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில் வியப்பேதுமில்லை.
கலை........... வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம
'ஆசியாவில் எரிஆற்றல் ஒத்துழைப்பு' என்ற கட்டுரையை கேட்டேன். இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பின்வரும் வாக்கியம் இடம்பெற்றது. மேலும், ஆசிய நாடுகள் மனம் ஒருமித்துப் பாடுபட்டு, பிரதேச உறுதிப்பாட்டைப் பேணிக்காத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையிலான முதலீட்டை விரிவாக்கி, எரியாற்றலின் பயன்பாட்டுத் திறனை உயர்த்தி, அதன் சிக்கனப் பயன்பாட்டைப் பரவல் செய்து, தூய்மையான உற்பத்தியை ஊக்குவித்து, உயிரின வாழ்க்கை சூழலைப் பாதுகாத்து, அரசுகளுக்கிடை பேச்சுவார்த்தையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கிளி.................பாண்டிச்சேரி என்.பாலகுமார்
அறிவியல் மற்றும் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி மூலமாக செல்லிடபேசி மூலம் பரவும் வைரஸ் என்ற நிகழ்ச்சி காலத்திற்கேற்ற நிகழ்ச்சி. தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிய முடிந்தது. தமிழகத்தில் குறிப்பாக நமது நேயர்களிடம் செல்லிட பேசி அதிகமாக பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒரு முன்னெச்சரிக்கையாக அமைந்துவிட்டது.
மேலும் புளூடுத் மூலமாக விரைவாக பரவி வருவதை நன்கு அறிவேன். நாங்கள் நடத்தி வரும் CRI SMS NET குறுத்தகவல்களை அனைத்தும் புளூடுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே நேயர்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்பதை கூடுதல் தகவலாகத் தெரிவித்து கொள்கிறேன்
கலை.......... பேளுக்குறிச்சி க செந்தில்
07.05.07 அன்று பெய்சிங் ஒலிம்பிக் போட்டி நுழைவு சீட்டுகள் வாங்குவது ப‌ற்றிய செய்தித் தொகுப்பு கேட்டேன். இணைய‌ த‌ளம் மூலம் நுழைவுச் சீட்டுகள் ப‌திவு செய்யும் வ‌சதி வ‌ர‌வேற்க‌த்த‌க்கது ஏனெனில் இத‌னால் ப‌யண ‌நேரம் ம‌ற்றும் நுழைவுச் சீட்டு பெறும் இட‌த்தில் ஏற்ப‌டும் இடையூறுகள் இல்லா‌மல் சில நொடிக‌ளில் இருக்கும் இட‌த்தில் இருந்தே நுழைவுச் சீட்டை முன் ப‌திவு செய்து விட்டு எவ்வித ப‌த‌ற்ற‌மும் இல்ல‌மல் அவர் அவர் ப‌ணிகளை க‌வ‌னிக்க முடியும் அல்லவா.
கிளி...... மதுரை-20 என்.ராமசாமி
1951ம் ஆண்டு,நவ சீன நிறுவப்பட்ட பின் தென் மேற்கு தேசிய இன பல்கலைகழகம் முதல்முதலாக நிறுவப்பட்டது பல்வேறு தேசிய இனங்களை சேர்ந்த மாணவர்கள் இதில் உள்ளனர். 50ஆண்டுகள் ஆன இப்பல்கலைக்கழகத்தில் 90,000 மாணவர்கள் பயிற்சி பெற்று உள்ளனர் என அறிந்து கொண்டேன். சீன அரசு ஹன் இனம் தவிர 55 சிறுபான்மை தேசிய இனங்களின் உண்மை நிலைமைக்கு இணங்க இதைக் கட்டி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. சீன அரசு தேசிய சிறுபான்மை இனங்களின் கல்வியின் வளர்ச்சியின் முலம் அவர்களின் வாழ்வு மலர வகுத்த முதல் திட்டமாகும்.
கலை....... சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன்
3.5.2007 மே தின விழாவை முன்னிட்டு பீஜிங்க் மாநகரில் பலவையான பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் குறிப்பாக மங்கோலிய இன நாடங்கள் கவிதை இசை வடிவில் அரங்கேற்றப் பட்டன. சீன நாடகத்துறை 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டவை என்று வரலாற்று சான்றுகள் உள்ளன. மே தின விழாவில் 57 புதிய திரைப்படங்கள் மக்களுக்காக காண்பிக்கப் பட்டன. இப்படி எல்லாம் மே தின விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதை மலர்விழி அம்மையார் மூலம் செய்தி தொகுப்பில் அறிந்தேன்.
அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியை வழங்கினார் வாணி. செல்லிடப்போசிகளின் மூலம் ஏற்படும் வைரஸ் தாக்குதல்களை பற்றியும் கணினியின் மூலம் ஏற்படும் வைரஸ் தாக்குதல்களயும் பற்றி குறிப்பிட்டார். இது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.
கிளி...........மதுரை-20 ஆ. அமுதராணியின் கருத்து.
அறிவியல் உலகம் முக அழகு பற்றி இன்று கூறப்பட்டது. அதிகமான பெண்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். உலக நாடுகள் முழுவதும் பெண்கள் முகத்தை அழகுபடுத்துவதில் செலவு செய்கிறார்கள் காட்டு வேலை செய்கிற கருப்பாயி முதல் உலக அழகி ஐஸ்வர்யாரய் வரை அழகுக்காக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆண்களும் இதற்கு விதி விலக்கு அல்ல.