• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-15 14:33:52    
பிரேஞ்சு ஓபன் டென்னி்ஸ் போட்டி

cri

பெய்ஜிங் நேரப்படி ஜூன் 10ம் நாள், கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் ஒன்றான பிரேஞ்சு ஓபன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் போட்டி, பிரான்சில் முடிவடைந்தது. உலக தரவரிசையில் ஆடவர் பிரிவில் முதலிடத்திலுள்ள Roger Federerஉம், இரண்டாவது இடத்திலுள்ள நாதாலும், ரோலண்ட காரோஸ் என்றழைக்கப்படும் விளையாட்டுக்களரியில் மோதினர். 3 மணி 10 நிமிடம் நீடித்த இப்போட்டியில், நாதால், Roger Federerஐ 3-1 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்தார். இருவரும், ரசிகர்களுக்கு சிறந்த போட்டியை வழங்கினர். நாதால், இந்த விளையாட்டுக்களரியில் தொடர்ந்து 21 வெற்றிகளை பெற்றுள்ளதோடு தொடர்ந்து 3வது முறையாக இச்சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன் முடிவடைந்த மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில், உலக தரவரிசையில் மகளிர் பிரிவில் முதலிடத்திலுள்ள Henin, இளம் செர்பிய வீராங்கனை Anna lvanovicஐ 2-0 என்ற ஆட்ட கணக்கில் வென்று, தொடர்ந்து 3வது முறையாக இச்சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.