
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், எந்த போட்டி, மிகப் பெரியளவில், மன உறுதி மற்றும் உடல் சோதனையை தாக்கு பிடிப்பதை பற்றியது? ஒரு போட்டியில், வீரர்கள்-வீராங்கனைகள், ஒரு நாளில் 3.8 கிலோமீட்டர் நீச்சல், 180 கிலோமீட்டர் மிதி வண்டிப்பயணம், 42 கிலோமீட்டர் மராதன் ஓட்டம் ஆகியவற்றை இடைவிடாமல் நிறைவு செய்ய வேண்டும். இப்போட்டி, இரும்பு மனிதன் என்ற மூவகை விளையாட்டுகள் கொண்ட ட்ரையத்லான் போட்டி என்றழைக்கப்படுகிறது.
2008ம் ஆண்டு, இரும்பு மனிதன் என்ற மூவகை விளையாட்டுகள் கொண்ட ட்ரையத்லான் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியுடன், பெய்ஜிங்கின் அழகான மீன் கல்லறை என்ற நீர்த்தேக்கத்தை அடையும்.
புகழ் பெற்ற மீன் கல்லறை என்ற நீர்த்தேக்கம், பெய்ஜிங்கின் வடக்கு பகுதியிலுள்ள சான்பிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நீர்த்தேக்கம், 1958ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. இதன் கொள்ளளவு, 6 கோடி கன மீட்டருக்கு மேல். 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, இரும்பு மனிதன் போட்டியாளர் 1.5 கிலோமீட்டர் நீச்சல், 40 கிலோமீட்டர் மிதி வண்டிப்பயணம், 10 கிலோமீட்டர் ஓட்டம் ஆகியவற்றை இங்கே நிறைவு செய்வார்கள்.
இவ்வாண்டு செப்டமபர் 15, 16 ஆகிய இரு நாட்களில், உலக கோப்பைக்கான இரும்பு மனிதன் போட்டி, இங்கு நடைபெறும். அவ்வமயம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஏற்பாட்டாளர்கள், விளையாட்டுக்களரியின் இருக்கை அளவை அதிகரிப்பர். இருக்கைகளின் எண்ணிக்கை 1000த்திலிருந்து, 6000மாக அதிகரிக்கும் எனப்படுகிறது.
|