சீன தேசிய இனத்தின் சுதந்திரத்தை பெறுவதற்கும் மக்களின் இன்பத்துக்கும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். 1981ம் ஆண்டு அவர் காலமானார். அவருடைய பெயர் சோ ச்சிங் லீன்.
சோ ச்சிங் லீன். தனது வாழஅநாள் முழுவதும் குழந்தைகள் மீது அன்பு செலுத்தினார். குழந்தைகள் பற்றிய லட்சியத்தை எதிர்கால லட்சியமாக அவர் கருதினார். அவர் மரணமடைந்ததற்கு பிந்தைய இரண்டாவது ஆண்டில், சோங் ச்சிங் லீன் நிதியம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இது வரை, நிதியத்தைச் சேர்ந்த மொத்த நிதி தொகை 10 கோடி யுவானை தாண்டியுள்ளது.
சீனாவின் மொத்த மக்கள் தொகை 130 கோடி ஆகும். அதில் 30 கோடிக்கு அதிகமானோர் குழந்தைகளாவார். சீனாவில் குழந்தைகள், எப்போதும், அதிகமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய வேண்டிய பிரிவினராவர். விடலைப்பருவத்தினர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சிறப்புச் சட்டங்கள், குழந்தைகளின் உரிமையையும் நலனையையும் பாதுகாக்கின்றன. தவிரவும், குழந்தை பற்றிய விவகாரத்துக்கு பொறுப்பான சிறப்பு வாரியங்கள் இருக்கின்றன. சீனாவில், பல அரசு சாரா சமூகசேவை நிறுவனங்கள் அரசாங்க வாரியங்களுடன் சேர்ந்து குழந்தை பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட்டுகுழந்தைகள், சீரான சூழலில் வளர்வதை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக, சோங் ச்சின் லின் அம்மையாரின் இறுதியான விருப்பத்துக்கிணங்க, குழந்தைகள் இலட்சியம் குழந்தைகளின் சீரான வளர்ச்சி முழுமையான வளர்ச்சி ஆகியவற்றுக்கு கவனமும் அன்பும் அளிக்கப்படுவதை இந்நிதியம் தனது நோக்கமாக கொண்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி பற்றி சில பொது நலனுடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இந்நிதியத்தின் நடப்பு தலைமை செயலர் லீ நின், செய்தியாளரிடம் விளக்கி கூறினார். அவர் கூறியதாவது
குழந்தைகளின் அறிவையும் ஒழுங்க நெறி நிலையையும் உயர்த்துவது குறித்து பல நடவடிக்கைகள் மேற்கொண்டோம். எடுத்துக்காட்டாக, குழந்தை கண்டு பிடிப்பாளர் பரிசு, சோ ச்சிங் லீன் குழந்தை கலை இலக்கிய பரிசு, முதலியவை தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டன. வளர்ச்சி அடையாத வட்டாரங்களில், வறுமையை நீக்கி, கல்விக்கு உதவி அளிப்பது என்னும் திட்டத்தை நடைமுறைப்படு்த்துகிறோம். வறுமையான குடுபங்களின் குழந்தைகள் கல்வி பெறுவதற்கு உதவி அளிப்பது, கல்வி நிலையங்களில் வசதிகளை மேம்படுத்துவது, உயர் நிலை கல்வி நிலையங்களில் சிறந்த மாணவர்களுக்கு கல்வி செலவு ஊக்க தொகை பரிசு நிறுவுவது ஆகியவை இத்திட்டத்தில் இடம் பெறுகின்றன. தவிரவும், மகளிர் மற்றும் குழந்தைகளின் மருத்துவ மற்றும் லட்சியத்தின் சுகாதார வளர்ச்சி பற்றி பல பணிகளையும் மேற்கொண்டோம் என்றார் அவர்.
|